குளிர்கால விடுமுறைக்குப் பின் உச்ச நீதிமன்றம் மீண்டும் இன்று திறக்கப்பட்டது. இதையொட்டி, அஸ்ஸாம் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி அளிக்கும் 370ஆவது சட்டப்பிரிவு நீக்கியதை எதிர்த்து தாக்கல்செய்யப்பட்ட வழக்கு, சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைவதற்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மறுபரிசீலனை கோரும் மனுக்கள் மீதான வழக்கும் அடுத்தடுத்து விசாரணைக்கு வருகின்றன.
இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மட்டும் 59 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளும் இன்று விசாரணைக்கு வரும்.
இதையும் படிங்க: எந்த ஆதாரமுமின்றி கைதுசெய்வதா? ப. சிதம்பரம் ஆதங்கம்