ETV Bharat / bharat

அஸ்ஸாம் முன்னாள் முதலமைச்சர் ஆஸ்திரேலியாவில் காலமானார்! - தேசிய குடிமக்கள் பதிவேடு

கவுஹாத்தி : அஸ்ஸாம் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சையீதா அன்வாரா தைமூர் உடல்நலக் குறைவின் காரணமாக இன்று உயிரிழந்தார்.

அஸ்ஸாம் முன்னாள் முதலமைச்சர் ஆஸ்ரேலியாவில் காலமானார்!

author img

By

Published : Sep 28, 2020, 9:57 PM IST

அஸ்ஸாம் மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சராக பொறுப்பு வகித்தவர் சையீதா அன்வாரா தைமூர் (83). பொருளாதாரப் பாடப்பிரிவில் பட்டம் பெற்ற சையீதா, 1956 - 1975 வரை ஜோர்ஹாட்டின் டெபிச்சரன் பாருவா பெண்கள் கல்லூரியில் விரிவுரையாளராகவும், பேராசிரியராகவும் பணியாற்றினார்.

அரசியலில் ஆர்வம் கொண்ட சையீதா, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் தொடங்கி தனது உழைப்பால் முதலமைச்சராக உயர்ந்தவராவார்.

சையீதா தைமூர் கடந்த 1980 டிசம்பர் 6 முதல் 1981 ஜூன் 30 வரை அஸ்ஸாமின் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். இந்திய வரலாற்றில் முதல் இஸ்லாமியப் பெண் முதலமைச்சர் என்ற பெருமையைக் கொண்ட இவரது அரசு ஜனாதிபதியால் ஆட்சியால் கலைக்கப்பட்டது.

1972, 1978, 1983 மற்றும் 1991 ஆம் ஆண்டுகளில் அஸ்ஸாம் சட்டப்பேரவையில் (எம்.எல்.ஏ) உறுப்பினராகவும், 1988 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்திற்கு (மாநிலங்களவை) காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அதேபோல பொதுப் பணித்துறை, வேளாண் துறை ஆகிய துறைகளின் அமைச்சராகவும் அஸ்ஸாம் அரசில் பங்கு வகித்து மாநிலத்தின் வளர்ச்சியில் பெரும் பணியாற்றியுள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியில் இணைந்தார். தனது மகனுடன் ஆஸ்திரேலியாவில் வசித்துவந்த அவர், உடல்நலக் குறைவு காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.

சையீதா அன்வாரா தைமூர் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, சோனியா காந்தி, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூலை 30ஆம் தேதியன்று அஸ்ஸாம் மாநில அரசால் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (என்.ஆர்.சி) இறுதி வரைவில் சையீதா அன்வாரா தைமூர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயர்கள் இணைக்கப்படாமல் இருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.