காரைக்கால் மாவட்டம், காரைக்கால் மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் தண்டபாணி, சக்தி, சிங்காரவேலு உள்ளிட்ட ஒன்பது மீனவர்கள் அக்டோபர் 5ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
நேற்று மாலை அவர்கள் வேளாங்கண்ணி அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, தண்டபாணி மீன்பிடி வலையில் சிக்கி கடலில் தவறி விழுந்தார். உடனடியாக அவரை சக மீனவர்கள் தேடிவந்தனர்.
இந்த நிலையில், கடலில் தவறி விழுந்த தண்டபாணியின் உடல், இன்று நாகப்பட்டினம் அருகே கரை ஒதுங்கியுள்ளது. இதனை அறிந்த மீனவர்கள், தண்டபாணியின் உடலை மீட்டு, பைபர் படகு மூலமாக காரைக்கால் மேடு மீனவர் கிராமத்திற்கு கொண்டுசென்றனர்.
பின்னர், மீனவரின் உடல், உடற்கூறாய்வுக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
மீன்பிடிக்கச் சென்று வலையில் சிக்கி கடலில் விழுந்து, மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் காரைக்கால் மேடு பகுதி மீனவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : 75 ஆண்டு கால அரச மரம் வேருடன் பிடுங்கப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றம்