அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகணத்தில் காரில் வந்த மர்மநபர் ஒருவர் திடீரென அங்குள்ளவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்த தொடங்கினர். இதில் ஐந்து பேர் பரிதபமாக உயிரிழந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் துப்பாக்கி சூடு நடத்திய நபர் தபால் கொண்டு செல்லும் லாரியை கைப்பற்றினர். அந்த நபரை காவல்துறையினர் பின் தொடர்ந்து பிடிக்க முற்படும் போது, அந்த நபர் காவல்துறையினர் மீதும் துப்பாக்கி சூடு நடத்த ஆரம்பித்தார். பின்னர் காவல்துறையினர் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டதில் அந்த நபர் உயிரிழந்தார். இந்நிலையில் எதற்காக அந்த நபர் துப்பாக்கிசூடு நடத்தினர் என்ற காரணம் தெரியவில்லை. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கண்டனத்தையும்,வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஆகஸ்ட் நான்காம் தேதி டெக்ஸாஸ் மாகணத்தில் வால்மார்ட் ஷாப்பிங் மாலில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 20 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.