ETV Bharat / bharat

'ரேபிட் சோதனைக் கருவிகள் வைரஸ் தொற்றைக் கண்டறியப் பயன்படாது' - கரோனா

டெல்லி: சீனாவிலிருந்து பெறப்பட்ட ரேபிட் சோதனைக் கருவிகள் ஒருவருக்கு வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறியப் பயன்படாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

Testing kits received from China
Testing kits received from China
author img

By

Published : Apr 17, 2020, 10:09 AM IST

Updated : Apr 17, 2020, 12:38 PM IST

கடந்த வாரமே இந்தியா வந்தடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரேபிட் சோதனைக் கருவிகள் நேற்று இந்தியா வந்தன. சுமார் ஐந்து லட்சம் ரேபிட் சோதனைக் கருவிகள் தற்போது இந்தியா வந்துள்ளன. இதன்மூலம் விரைவில் பரிசோதனைகள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ரேபிட் சோதனைக் கருவிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த வழிமுறைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ளது. அதில், ரேபிட் சோதனைக் கருவிகள் ஒருவருக்கு வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறியப் பரிந்துரைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தலைமை அறிவியல் அறிஞர் கங்காதர் கூறுகையில், "இந்த ரேபிட் சோதனைக் கருவிகள் மூலம் ஒருவருக்கு கோவிட்-19 தொற்று உள்ளதா என்பதை 80 விழுக்காடு வரையே துல்லியமாகத் தெரிந்துகொள்ள முடியும்.

எனவே, இவற்றை வைரஸ் தொற்றைக் கண்டறியப் பயன்படுத்த முடியாது. இருப்பினும் வைரசின் போக்கு குறித்தும் எந்தெந்த இடங்களில் வைரஸ் தொற்று அதிகமாக உள்ளது என்பது குறித்தும் தெரிந்துகொள்ள இது உதவியாக இருக்கும்" என்றார்.

மேலும், இதுவரை புனேவிலுள்ள தேசிய கிருமிகள் கழகத்தில் 23 வகையான ரேபிட் சோதனைக் கருவிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 13 கருவிகள் தங்களுக்குத் திருப்திகரமாக இருந்ததாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கரோனா பாதிப்பை எதிர்கொள்ள இந்திய வெளியுறவுத்துறை மேற்கொள்ளும் முயற்சிகள்...!

Last Updated : Apr 17, 2020, 12:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.