அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏசியன் சொசைட்டி சார்பில் காணொலி வாயிலாக ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தானுடன் இயல்பான உறவு தொடராததற்கு அவர்கள் பயங்கரவாத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டதே காரணம் எனக் குற்றஞ்சாட்டினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்தை பொதுவெளியிலேயே நியாயப்படுத்தி பேசியுள்ளது. இதனால், அவர்களுடன் இயல்பான உறவை தொடர முடியவில்லை.
அந்நாட்டுடன் காலம் காலமாக சிறிய சிறிய பிரச்னை இருந்துவந்தாலும், பயங்கரவாதம் நீண்ட கால பிரச்னையாக இருந்துவந்துள்ளது.
இந்தியாவுடன் இயல்பான வர்த்தகத்தை தொடர பாகிஸ்தான் விரும்பவில்லை. பாகிஸ்தானின் நெருக்கமான நாடுகளின் பட்டியலில் நம் நாடு இடம்பெறவில்லை.
இந்தியர்களுக்கு நுழைவு இசைவு (விசா) கொடுப்பதில் பாகிஸ்தான் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தியா, ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கிடையே உள்ள இணைப்பை முடக்கியுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: களத்திற்கு வரும் ராகுல் காந்தி