புதுச்சேரி திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயில் அமைந்துள்ளது. இதில் வெங்கடாஜலபதி பெருமானின் திருவுருவ சிலை சுமார் 16 அடி அளவில் திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்திலிருந்து வடிவமைக்கப்பட்டு இங்கு கொண்டு வரப்பட்டது.
திருப்பதி மூலஸ்தானத்தில் உள்ள திருமாலின் உருவத்தை போன்றே அதே அளவு உயரம் அதேபோல் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிலை பஞ்சவடிக்கு கொண்டுவரப்பட்டு இன்று 10ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது.
மேலும், வருகின்ற மே 23ஆம் தேதி நடைபெற உள்ள மகா சம்ப்ரோக்ஷணத்தில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு வெங்கடாஜலபதியின் திருவருளைப் பெற வேண்டும் என்று கோயில் நிர்வாகத்தினர் பஞ்சமுக ஸ்ரீ ஜெய மாருதி சேவா டிரஸ்ட் மற்றும் சாரிட்டபிள் டிரஸ்ட் இணைச் சேர்ந்த நிர்வாகிகள் நரசிம்மன், பலர் கேட்டுக்கொண்டனர்.