ETV Bharat / bharat

தெலங்கானாவில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை முயற்சி! - குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை முயற்ச்சி

ஹைதராபாத்: குடும்ப பிரச்சனை காரணமாக இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த நிலையில் காணப்படும் சிறுவர்கள்
இறந்த நிலையில் காணப்படும் சிறுவர்கள்
author img

By

Published : May 21, 2020, 3:48 PM IST

ஹைதராபாத் ஷாமிர்பேட் அருகிலுள்ள ஒரு பார்மா நிறுவனத்தில் ஜூனியர் விஞ்ஞானியாக பணிபுரிபவர் கோபிநாத். இவரது மனைவி ப்ரீத்தி. இவர்களுக்கு திருமணமாகி ஐந்து வருடங்களாகிய நிலையில், கவுரவ்(4) மற்றும் கவுஷிக்(3) என்ற இரு மகன்கள் இருந்தனர்.

கடந்த சில நாட்களாக கோபிநாத்துக்கும், அவரது மனைவி ப்ரீத்திக்குமிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. நேற்று இதேபோன்று கணவன்- மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை பெரியதாகி தகராறில் முடிந்துள்ளது. அதன்பின்னர் கோபிநாத் வேலைக்குச் சென்றுள்ளார்.

இதனால் மனமுடைந்த ப்ரீத்தி தனது இரு குழந்தைகளுடன் தானும் தற்கொலை செய்துகொள்ள முடிவுசெய்து உணவில் வி‌ஷத்தை கலந்து, தன்னுடைய இரு குழந்தைகளுக்கும் கொடுத்து, தானும் சாப்பிட்டுள்ளார். அதன்பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் குழந்தைகள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தாய் ப்ரீத்தி தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பீரித்தி

குடும்ப பிரச்சனை காரணமாக குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்ற ப்ரீத்தி மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 302 (கொலை) இன் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: N-95 முகக் கவசம் கேட்டதற்காக மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அரசு மருத்துவர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.