பிகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தில் உள்ள மகேந்திரப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிஷோரி (14). இவர் நேற்று காலை 6 மணியளவில் தனது தாயுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிறுமி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பித்துச் சென்றனர்.
இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் சிறுமியை தீக்காயங்களுடன் அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றனர். இந்நிலையில், சிறுமியின் உடலில் அதிகப்படியான தீக்காயங்கள் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
தூங்கிக்கொண்டிருந்த சிறுமி மீது பெட்ரோல் ஊற்றி கொடூரமாகக் கொலைசெய்த குற்றவாளிகளைக் கைதுசெய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அங்கு ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, அச்சிறுமி எதற்காகக் கொலைசெய்யப்பட்டார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர். மேலும் அச்சிறுமியை பெட்ரோல் ஊற்றி கொலைசெய்த நபர்களைக் காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு எதிராக பதிவிட்ட அல்கா லம்பா!