ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அம்ரிட்-அபர்ணா தம்பதி. இவர்களுக்கு பகவதி (14) என்ற மகள் உள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் குரிந்தர் மகன் ஹர்ஜித் (16) (அனைவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன). இவர்கள் இருவரும் அண்டைவீட்டுக்காரர்கள். இதனால், ஹர்ஜித்தும், பகவதியும் நண்பர்களாகப் பழகிவந்தனர்.
இந்நிலையில், ஹர்ஜித் பகவதியிடம் விளையாடலாம் எனக் கூறி அருகேயுள்ள பழைய பள்ளி கட்டடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், ஏற்கனவே ஹர்ஜித்தின் நண்பர்கள் இருவர் அங்கு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, ஹர்ஜித்தும் அவரது நண்பர்கள் இருவரும் பகவதியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
பின்னர் இது குறித்து வெளியில் சொல்லக் கூடாது, சொன்னால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டி வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். இதையடுத்து, பகவதி தனக்கு நடந்த அவலத்தை பற்றி பெற்றோரிடம் கூறியுள்ளார்.
அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது தொடர்பாக ஜிந்த நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிந்து மூவரையும் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்கள்: சமூக வலைதளங்களுக்கு ஆணையம் கேள்வி!