சுதந்திர இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவரும், ஆசிரியர் பணியை அர்ப்பணிப்புடன் செய்தவருமான சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5ஆம் தேதியை இந்தியா ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடிவருகிறது.
அந்தவகையில் இன்று உலகெங்கிலும் உள்ள இந்தியர்களால் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.




