ETV Bharat / bharat

ஆசிரியரின் அலட்சியத்தால் உயிரிழந்த கேரள மாணவி.! - வயநாட்டில் பள்ளி மாணவி உயிரிழப்பு

ஊட்டி: வயநாட்டில் பள்ளி வகுப்பறையில் விஷப்பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்தார். மாணவியின் உயிரிழப்புக்கு ஆசிரியரின் அலட்சியமே காரணம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Teacher negligence on the life of a Kerala student
author img

By

Published : Nov 22, 2019, 8:02 PM IST

தமிழ்நாட்டின் ஊட்டி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரியில் வசிப்பவர் மாணவர் ஷெகலா ஷெரீன். இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த புதன்கிழமை (நவ.20) வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார். பள்ளியில் உள்ள வகுப்பறையில் பாடம் படித்துக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த சந்து ஒன்றில் இருந்து விஷப்பாம்பு ஒன்று வெளியே வந்தது. அது மாணவியின் காலில் கடித்தது.

இதனை அறிந்த மாணவி தன்னை பாம்பு கடித்து விட்டதாக ஆசிரியர் விகில் விஜீலிடம் கூறினார். ஆனால் அதனை பொருட்படுத்தாத ஆசிரியர், வழக்கம் போல் தொடர்ந்து பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் சுமார் 45 நிமிடங்கள் கழித்து மாணவி மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து மாணவியை அருகில் உள்ள அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அங்கு பணியில் இருந்து மருத்துவர் மரியா, விஷமுறிவு மருந்து இல்லை எனக் கூறி சிகிச்சையை தாமதப்படுத்தியுள்ளார்.

மாணவியின் உயிரிப்புக்கு நீதி வேண்டி போராட்டம்.!

இதையடுத்து அந்த மாணவியின் பெற்றோர் அவளை கள்ளிக்கோட்டை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவி ஷெரீன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மாணவியின் இழப்பை தாங்காத சக மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மாநில உயர் நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: வயநாட்டில் பள்ளி வகுப்பறையில் விஷப்பாம்பு கடித்து மாணவி உயிரிழப்பு.!

Intro:OotyBody:உதகை 22-11-19

தமிழக கேரள எல்லைப் பகுதியான வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரியில் அரசுப்பள்ளியில் வகுப்பறையில் மாணவியை கடித்த பாம்பு. பாம்பு கடித்தும் அலட்சியமாக பாடம் நடத்திய ஆசிரியர் , மருத்துவமனையில் போதிய விஷ முறிவு மருந்து இல்லாத காரணத்தினால் உயிரிழந்த மாணவி . பல்வேறு தரப்பிலும் நடத்தி வரும் போராட்டங்களால் பெரிய போராட்டமாக மாறியுள்ள கேரளா மாநிலம் .

கூடலூரை அடுத்துள்ள கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரியில் வசிப்பவர் மாணவர் ஷெகலாசெரின் இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த புதன் அன்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்துள்ளார். பள்ளியில் உள்ள வகுப்பறையில் படித்துக் கொண்டு கொண்டிருந்தபோது பள்ளி வகுப்பறையில் இருந்த பொந்து ஒன்றில் இருந்து பாம்பு ஒன்று மாணவியை காலில் கடித்துள்ளது. இதனை அறிந்த மாணவி தன்னை பாம்பு கடித்து விட்டதாக ஆசிரியர் விகில் விஜீலிடம் கூறி உள்ளார். ஆனால் ஆசிரியரோ அதனை பொருட்படுத்தாமல் வழக்கம்போல் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார் 45 நிமிடங்கள் முடிந்து அந்த மாணவி மயங்கி விழுந்தார். இதனையடுத்து அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு மாணவியை கொண்டு சென்றுள்ளனர் . ஆனால் பொது மருத்துவமனையில் அங்கு பணியில் இருந்த மருத்துவர் மரியா சிகிச்சையை தாமதப்படுத்தியும் மேலும் அதற்கான விஷ முறிவு மருந்து இல்லை என்றும் தாமதமாக கூறியதை அடுத்து பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கள்ளிக்கோட்டை மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாணவி பரிதாபமாக உயிரிழந்த நிலையில் நேற்று முதல் சுல்தான் பத்தேரி பகுதியில் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறனர் . இதனையடுத்து இன்று இந்த மாணவி இறப்புக்கு காரணமான ஆசிரியர் மற்றும் மருத்துவரை அரசு தற்காலிக பணியிட நீக்கம் செய்துள்ள நிலையில், அரசு மருத்துவமனையும் பணிபுரியும் மருத்துவர்கள் போன்றவர்கள் சிகிச்சை அளிக்க நேரம் கடத்தப்பட்டததால் தான் மாணவி உயிரிழந்தார் என கூறி பல்வேறு வகையில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதனை கண்டித்து அந்த பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டடுள்ள நிலையில் சுல்தான் பத்தேரி முழுவதும் போராட்டக் களமாக மாறியுள்ளது. அரசுப்பணியில் துரிதமாக செயல்பட கூடிய மருத்துவர் மற்றும் ஆசிரியரின் மெத்தன போக்கால் மாணவி உயிரிழந்தது கேரள மாநிலம் முழுவதும் பதட்டத்தை ஏற்படுத்தியது .Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.