இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “புதுச்சேரியில் கரோனா நிவாரணத் தொகையான இரண்டாயிரம் ரூபாய் கடந்த 31ஆம் தேதி முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுவருகிறது. கிராமப்புறங்களில் வங்கிப் பணியாளர்கள் மூலம் நேரடியாகப் பயனாளிகளுக்கு வீடுகளில் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 3,025 பேர் வீட்டுக்காவலில் வைத்து, கண்காணிக்கப்பட்டுவருகின்றனர். நான்கு பேரைத் தவிர வேறு யாருக்கும் நோய் தொற்று அறிகுறி இல்லை. புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவ உபகரணங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம் தொடங்கப்பட்டால், வரிச்சலுகை உள்ளிட்ட சலுகைகள் அளிக்கப்படும் என்று அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே ஜூலை மாதம் இறுதிக்குள் புதுச்சேரியில் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் கம்பெனிகள் தொடங்க வருபவர்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...கரோனாவால் மூடப்பட்ட வங்கி...!