மக்களவையின் இன்றைய கேள்வி நேரத்தின்போது வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாது என்பதை தானே வந்து அறிவித்தோர், அதிகாரப்பூர்வ மொழி ஆகியவை குறித்த விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப முயற்சித்தன.
ஆனால், கேள்வி எழுப்ப மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து, திமுக, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதுகுறித்து, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி பதிலளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "சபாநாயகர் என் மனதை புண்படுத்தலாம். நான் பேசுவதற்கு அவர் ஏன் அனுமதி தரவில்லை என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஒட்டு மொத்த தமிழ் மக்களும் தமிழ் மொழி குறித்து கேள்வி எழுப்ப முயல்கின்றனர். இது ஒரு மனிதரை சார்ந்தது அல்ல. ராகுல் காந்தி பற்றி கிடையாது. இது தமிழ்நாடு, தமிழ் மக்கள் குறித்தது ஆகும்.
கேள்வி எழுப்ப அனுமதி மறுக்கப்படுகிறது. இது தமிழ் மக்களை அவமதிக்கும் செயலாகும். மொழியை பாதுகாத்து தங்கள் மொழியில் பேசுவதற்கு தமிழ் மக்களுக்கு உரிமையுண்டு. கேள்வி எழுப்ப ஓம் பிர்லா மறுத்துள்ளது அவர்களின் உரிமையை மறுப்பதற்கு சமம்" என்றார்.
இதையும் படிங்க: பொருளாதாரத்தைப் பத்திரமாக பாத்துக்கோங்க - ராகுல்