ETV Bharat / bharat

மதக் கலவரத்தைத் தூண்டியதாகக் கூறி கிரண் பேடி மீது புகார்

author img

By

Published : Dec 18, 2019, 9:31 AM IST

புதுச்சேரி: ஆளுநர் கிரண்பேடி மீது வழக்குப் பதிவு செய்ய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகக் கட்சி அமைப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Tamil Nadu Muslim Munnetra Kazagham complaint against kiran bedi
Tamil Nadu Muslim Munnetra Kazagham complaint against kiran bedi

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு ஆர்.எஸ்.எஸ் பள்ளியில் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அப்போது அந்த நிகழ்ச்சியில் 1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வு 4 ஆயிரம் மாணவர்கள் மத்தியில் மீள் உருவாக்கம் செய்து காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியின்போது புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா ஆகியோர் கலந்துகொண்டு இந்த நிகழ்வை ஊக்குவித்துள்ளனர்.

’இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும், இச்செயல் மாணவர்களிடம் மதக் கலவரத்தைத் தூண்டி சட்டம் ஒழுங்கைக் கெடுக்கும் எனவும், உயர்பதவியில் இருக்கும் இவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தை குலைக்கும் வகையில் மதச்சார்பின்மைக்கு எதிராக செயல்பட்டது கண்டிக்கத்தக்கது. எனவே இவர்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாவட்டத் தலைவர் பஷீர் அகமது, புதுச்சேரி நேரு வீதியில் உள்ள பெரியகடை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கட்சி அமைப்பினர் புகார்

அப்போது புதுச்சேரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் தலைவர் தேவ பொழிலன், தந்தை பெரியார் இயக்கத்தைச் சேர்ந்த இளங்கோ உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

இதையும் படிங்க: ஆட்சியே கவிழ்ந்தாலும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் - முதலமைச்சர் நாராயணசாமி

Intro:புதுச்சேரி ஆளுநர் மீது வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கட்சி உள்ளிட்ட அமைப்பினர் காவல் நிலையத்தில் புகார்Body:புதுச்சேரி ஆளுநர் மீது வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கட்சி உள்ளிட்ட அமைப்பினர் காவல் நிலையத்தில் புகார்

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு ஆர்எஸ்எஸ் பள்ளியில் கடந்த டிசம்பர் 15-ம் தேதி பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியில் 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வை 4000 மாணவர்கள் மத்தியில் மீள் உருவாக்கம் செய்து காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியின்போது புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா ஆகியோர் கலந்துகொண்டு இந்த நிகழ்வை ஊக்குவித்து உள்ளனர் இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும் இச்செயல் மாணவர்களிடம் மத வெறுப்பை தூண்டி சட்ட ஒழுங்கைக் கெடுக்கும். மதக்கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது என்றும் உயர்பதவியில் இருக்கும் இவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை குலைக்கும் வகையில் மதச்சார்பின்மைக்கு எதிராக செயல்பட்டது கண்டிக்கத்தக்கது எனவே இவர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாவட்ட தலைவர் பஷீர் அகமது என்பவர் இன்று புதுச்சேரி நேரு வீதியில் உள்ள பெரியகடை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார் அப்போது புதுச்சேரி விடுதலை சிறுத்தை கட்சியை மாநில தலைவர் தேவ பொழிலன். தந்தை பெரியார் இயக்கம் இளங்கோ உள்ளிட்ட வர்கள் உடன் சென்றனர்Conclusion:புதுச்சேரி ஆளுநர் மீது வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கட்சி உள்ளிட்ட அமைப்பினர் காவல் நிலையத்தில் புகார்

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.