இது தொடர்பாக ஊடகங்களை சந்தித்து பேசி வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, "தொற்றுநோய் பரவல் தடுப்பு சட்டம், வெளிநாட்டுச் சட்டத்தின் 14 பி, 51 டிஎம் சட்டம், 3 தொற்றுநோய் சட்டம், பிரிவு 188, 269, 270, 271 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தப்லீக் ஜமா அத்தைச் சேர்ந்த வெளிநாட்டினர் மீதான வழக்குகள் திரும்பப்பெறப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 24ஆம் தேதி நிலவரப்படி, ஆயிரத்து 95 கவன ஈர்ப்பு (லுக் அவுட்) சுற்றறிக்கைகள் நீக்கப்பட்டுள்ளன. மேலும், 630 வெளிநாட்டினர் அவரவர் தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தூதரக அணுகல்கள், எல்.ஓ.சி.களை நீக்குவது, ஐமா அத் உறுப்பினர்களை அந்தந்த நாடுகளுக்கு சுமூகமாக திருப்பி அனுப்புதல் ஆகியவற்றை அமைச்சகம் தீவிரமாக செய்து வருகிறது. வெளிநாட்டு தூதரகங்களை ஒருங்கிணைத்து இந்த பணிகளை செய்துவருகிறோம்.
தப்லீக் ஜமாஅத்தின் உறுப்பினர்கள், இந்தியாவில் விசா முறைகேடுகளில் ஈடுபட்டதற்காக வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டனர். இனி இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது என்றும் விசா நடைமுறைகளுக்கு ஏற்ற பொருத்தமான வகையில் முறையாக விசா பெற்று இந்தியா வரவேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தினார்.