ETV Bharat / bharat

தேர்தலைப் புறக்கணித்த ஜம்மு-காஷ்மீர் கிராம மக்கள்! - அரசியல் அமைப்பு சட்டம்

பாரமுல்லா: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட மேம்பாட்டு கவுன்சிலுக்கான இரண்டாம் கட்ட தேர்தலில், சோப்பூர் பகுதியில் உள்ள துரு கிராம மக்கள் வெறும் 15 பேர் மட்டுமே வாக்களித்த நிலையில் மற்ற அனைவரும் தேர்தலைப் புறக்கணித்தனர்.

சையத் அலி ஷா கிலானி
சையத் அலி ஷா கிலானி
author img

By

Published : Dec 2, 2020, 12:01 PM IST

ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 280 மாவட்ட கவுன்சில் தொகுதிகளுக்கான தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், 43 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றுவருகிறது.

முன்னதாக 43 தொகுதிகளுக்கு நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 51.6 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்தன. எட்டு கட்டங்களாக நடைபெறும் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதியுடன் முடிவடைகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 22ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானியின் சொந்த ஊரான வடக்கு காஷ்மீரின் சோப்பூர் பகுதியில் அமைத்துள்ளது துரு கிராமம். இங்கு நேற்று மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் (டி.டி.சி.) தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 0.09 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பதிவானது.

கிலானியின் சொந்த ஊரான துரு கிராமத்தில் சுமார் ஆயிரத்து 600 பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். ஆனால், நேற்று நடைபெற்ற தேர்தல் வாக்குப்பதிவில் வெறும் 15 வாக்குகள் மட்டுமே பதிவானது.

ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்புத் தகுதி வழங்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்துசெய்யப்பட்ட பிறகு, அம்மாநிலத்தில் நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும்.

இதையும் படிங்க: சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்குப் பிறகு நடைபெறும் முதல் தேர்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.