இந்தியாவின் பெரிய உணவு டெலிவரி நிறுவனம் ஸ்விகி. இது, தற்போது "ஸ்விகி கோ" மூலம் முக்கிய ஆவணங்கள், சலவைத் துணிகள், வீட்டிலேயே மறந்துவிட்டு வந்த சாவி போன்றவற்றை டெலிவரி செய்யவுள்ளது. தற்போது, பெங்களூருவில் மட்டும் இது செயல்பட்டு வருகிறது. பின்னர், ஹைதராபாத்திலும் 2020ஆம் ஆண்டுக்குள் 300 நகரங்களுக்கும் இந்த சேவை விரிவுப்படுத்தப்படும் என ஸ்விகி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மளிகைப் பொருட்கள், பூக்கள், மருந்துகள் உள்ளிட்டவற்றையும் ஒரு மணி நேரத்திற்குள் டெலிவரி செய்ய இது காத்துக்கொண்டிருக்கிறது. நகரப்புற சேவைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இந்த ஸ்விகி கோ உதவும் என அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.