தேவிந்தர் சிங் மற்றும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவரான - இர்பான் ஷாஃபி மிர், சயீத் நவீத் முஷ்டாக் ஆகியோர், இதற்கு மேல் தங்களை காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளத்தேவையில்லை எனக் கூறி மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை விரைவில் தொடங்குகிறது.
குற்றம்சாட்டப்பட்ட மூவர் சார்பாக வாதாடவுள்ள வழக்கறிஞர் எம்.எஸ்.கான், இந்த மூவரும் வழக்கில் தவறுதலாகவும் பொய்யாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றார். ''இவர்கள் மூவரும் இந்திய இறையாண்மை, பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கிற வகையில் செயல்பட்டார்கள் என நிரூபிப்பதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. எனவே, இவர்கள் மேலதிக விசாரணைக்கு காவலில் வைக்க வேண்டிய அவசியமில்லை" என வழக்கறிஞர் எம்.எஸ். கான் தெரிவித்தார்.
தேவிந்தர் சிங் கடந்த ஜனவரியில் ஜம்மு-காஷ்மீர் காவல் துறையால் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
டெல்லி உட்பட பல்வேறு இடங்களில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தத் திட்டமிட்டது தொடர்பாக தேவிந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பினரிடன் சமூக ஊடகங்களில் தொடர்பில் இருந்துள்ளார் என காவல் துறை குற்றச்சாட்டு வைக்கிறது.
மேலும், இவருடன் கைது செய்யப்பட்ட முஷ்டாக், ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத் தளபதிகளுடன் தொடர்பில் இருந்தார் என்றும்; முக்கியப்புள்ளிகளை கொலை செய்யும் திட்டம் வைத்திருந்தார் என்றும் கூறப்படுகிறது.