தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட சென்னை - சேலம் இடையேயான பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பாமக இளைஞரிணி தலைவர் அன்புமணி ராமதாஸ், கிராம மக்கள் ஆகியோர் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு தடை விதித்தது.
இதனையடுத்து, நிலங்களை கையகப்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்ககோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நீதிபதி இந்து மல்கோத்ரா தலைமையிலான அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எட்டு வழிச்சாலைக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்க மறுத்த நீதிபதிகள் வழக்கை ஜூலை மாதம் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.