பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங்கின் மகன் ரனீந்தர் சிங் ஐரோப்பிய நாடுகளில் முறைகேடாக வங்கிக் கணக்கை வைத்திருப்பதாக வருமான வரித்துறைக்கு உளவுத்துறை ரகசிய தகவல் அளித்தது. இதன் அடிப்படையில் அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் ரனீந்தர் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக வரும் அக்டோபர் 27ஆம் தேதி, நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு பஞ்சாப் முதலமைச்சரின் மகனுக்கு அமலாக்க துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இது குறித்து ரனீந்தர் சிங்கின் வழக்கறிஞர் ஜெய்வர் ஷெர்கில் கூறுகையில், "ரனீந்தர் சிங்கிற்கு அமலாக்க துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர் ஒரு சட்டத்தை மதிக்கும் குடிமகன், சட்ட நடைமுறைகளை அவர் முறையாக பின்பற்றுவார். இது ஒரு பழைய வழக்கு. சம்மன் அனுப்பப்பட்டுள்ள காலம்தான் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: பிரதமர் மீது கோபத்திலிருக்கும் பஞ்சாப் விவசாயிகளின் குரலை கேட்க வேண்டும் -ராகுல் காந்தி!