டெல்லி: இந்திய ரயில்வே வாரியத்தின் புதிய தலைவராக சுனித் சர்மாவை நியமிக்க, மத்திய அமைச்சரவையின் பணி நியமனக் குழு நேற்று (ஜனவரி 1) ஒப்புதல் வழங்கியது. கிழக்கு ரயில்வேயின் முன்னாள் பொது மேலாளரான சுனித் சர்மா, ரயில்வே துறையில் 40 ஆண்டுகள் அனுபவமிக்கவர்.
ரயில்வே வாரியத்தின் தலைவர் வினோத் குமார் யாதவின் பதவிக்காலம் டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், புதிய தலைவராக சுனித் சர்மா பொறுப்பேற்றுக் கொண்டார். மெக்கானிக்கல் மற்றும் எலெக்ட்ரிக்கல் என்ஜினியரிங் பயின்ற சுனித் சர்மா, 1979ஆம் ஆண்டு இந்தியன் ரயில்வேயில் சேர்ந்தார்.
இதையும் படிங்க: இலவச தடுப்பூசி: மத்திய அமைச்சருக்கு நன்றி தெரிவித்த கரோனா வாரியர்ஸ்!