நடிகரும், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சருமான அம்பரீஷ் பல காலமாக மாண்டியா தொகுதியில் மக்களவை உறுப்பினராக இருந்தவர். இவர் இறந்த பிறகு மாண்டியா தொகுதியில் உள்ள மக்கள் அவர் மனைவி சுமலதா அம்பரீஷை காங்கிரஸ் கட்சிக்கான மாண்டியா தொகுதியின் வேட்பாளராக அறிவிக்க கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் காங்கிரஸ் மாண்டியா மக்களவை தொகுதியை தன் கூட்டணி கட்சியான மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு ஒதுக்கியது. அதிருப்தி அடைந்த சுமலதா, தான் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்தார்.
எனவே, மாண்டியா தொகுதியில் மதசார்பற்ற ஜனதா தளம், பாஜக, சுமலதா அம்பரீஷ் என மும்முனை போட்டி நடக்க உள்ளது.
மக்களவைத் தேர்தல் கர்நாடக மாநிலத்தில் இரு கட்டமாக நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.