பாஜகவின் மூத்த உறுப்பினரான சுப்பிரமணியன் சாமி, 2016ஆம் ஆண்டு முதல் மாநிலங்களவையில் நியமன உறுப்பினராக உள்ளார். நாட்டின் பொருளாதாரம், வேலையின்மை முதல் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் வரை அவ்வப்போது பகீர் கருத்துகளை தெரிவித்து புயலைக் கிளப்புவது இவரது வழக்கம்.
சமீபத்தில்கூட நாட்டின் பொருளாதாரம் கடவுளின் செயலால் உருவான கரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்திற்கு சுப்பிரமணியன் சாமி தனக்கே உரித்தான பாணியில் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாஜகவின் ஐடி பிரிவிலுள்ள சிலர் போலி ட்விட்டர் கணக்குகளை உருவாக்கி அதன் மூலம் தன்னை தனிப்பட்ட முறையில் தாக்கும் ட்வீட்களை பதிவிடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக சுப்பிரமணியன் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "பாஜகவின் ஐடி பிரிவு முரட்டுத்தனமாகிவிட்டது. அதன் உறுப்பினர்கள் சிலர் போலி கணக்குகளை உருவாக்கி என் மீது தனிப்பட்ட தாக்குதல்களை நடத்த, போலி ட்வீட்களை பதிவிடுகின்றனர்.
இதனால் என்னைப் பின் தொடர்பவர்கள் கோபம் கொண்டு பதிலுக்கு தனிப்பட்ட தாக்குதல்களை மேற்கொண்டால், கட்சியிலுள்ள ஐடி பிரிவினர் இந்த முரட்டுத்தனமான நடவடிக்கைகளுக்கு எப்படி பாஜக பொறுப்பேற்க முடியாதோ, அதேபோல் இதற்கும் நான் பொறுப்பாக முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சுஷாந்த் மரணத்தை வைத்து பிகார் தேர்தலில் அரசியல் செய்யும் பாஜக - காங்கிரஸ் தாக்கு