திருவனந்தபுரம்: மலைவாழ் மக்களுக்கு உதவ உணவு பொட்டலங்கள், காய்கறிகள், மளிகைப் பொருட்களை பள்ளி மாணவ இயக்கத்தினர் வழங்கினர்.
விதுரா வொகேஷனல் மேல்நிலைப் பள்ளியில் உள்ள காவலர் படையைச் சேர்ந்த மாணவர்கள் சேர்ந்து வறுமையில் வாடும் நண்பர்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும் ஊரடங்கு காலத்தில் உதவிகள் செய்ய முடிவுசெய்தனர்.
அதனைத் தொடர்ந்து மளிகைப் பொருட்கள், உணவுப் பொருட்கள் அடங்கிய பையை எடுத்துக் கொண்டு பசியில் வாடும் மக்களைக் காணச் சென்றனர். மேலும், அவர்கள் சென்ற அந்த இடத்திற்கு எந்த தன்னார்வலர்களும், அமைப்புகளும் நெருங்க சிரமம்கொள்வர் என்று கூறப்படுகிறது.
காரணம் வனத்தில் அதிகளவில் யானைகள் நடமாட்டம் இருக்குமாம். ஆனால், அதனையெல்லாம் பொருட்படுத்தாமல், மாணவர்கள் ஏழைகளுக்கு உதவி செய்த காரியம் அனைவரிடத்தில் நன்மதிப்பைப் பெற்றுத் தந்துள்ளது.