மகாராஷ்டிரா மாநிலத்தை தாக்கிய நிசார்கா புயலால் மும்பை, ரத்னகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. பல இடங்களில் மரங்கள் வேறோடு சாய்ந்தன.
இந்தப் புயலின் பாதிப்பு மெல்ல மெல்ல தெரியவருகிறது. பகவதி கடற்கரை பகுதியருகே ஒரு படகில் சிக்கித்தவிக்கும் 13 நபர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. பலத்த காற்று, மழைக்கிடையே மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.