அவுட்லுக் டிராவலர் விருது சுற்றுலாத்துறையின் வெற்றியின் ஒரு அடையாளமாகும். அந்த வகையில் கூட்டு தலைமை நிர்வாக அலுவலர் நிலேஷ் துபே இந்த விருதைப் பெற்றிருப்பது பெருமகிழ்ச்சியை தருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதியன்று மோடியால் திறந்து வைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் சிலையை இதுவரை 42 லட்சம் சுற்றுலாப் பயணிகள் காண வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், ஜங்கிள் சஃபாரி, ஆக்டா நர்சரி, கற்றாழை தோட்டம், பட்டாம் பூச்சி தோட்டம், டைனோசர் பூங்கா, சுகாதார வன, குழந்தைகள் ஊட்டச்சத்து பூங்கா உள்ளிட்வற்றை அமைத்து குடும்ப தின விடுமுறை கொண்டாட்டமாக மாற்றியுள்ளது குஜராத் அரசு. 2019ஆம் ஆண்டில், உலக புகழ்பெற்ற ‘டைம்’ இதழால் உலகின் 100 சிறந்த சுற்றுலா தலங்களில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையும் சேர்க்கப்பட்டது பெருமைக்குரியதாகும்.
இந்த ஆண்டு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) இந்த ஆண்டு எட்டு அதிசயங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்து நிர்வாக இயக்குநர் ராஜீவ் குமார் குப்தா கூறுகையில், "சர்தார் வல்லபாய் படேல் சிலை 2020ஆம் ஆண்டின் அவுட்லுக் டிராவலர் விருதைப் பெற்றுள்ளது. இது குஜராத் மாநிலத்திற்கு கிடைத்த பெருமையாகும். சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த உலகத்தரம் வாய்ந்த உயர்தர வசதிகளை இங்கு வழங்கியுள்ளோம்.
சர்தார் வல்லபாய் படேலின் சிலை இன்று உலகம் முழுவதும் ஒற்றுமையின் அடையாளமாக மாறியுள்ளது" என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: ‘அருமையான வரவேற்புக்கு நன்றி’ - மோடியை பாராட்டிய ட்ரம்ப்