காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள மீன் பிடி துறைமுகத்தை அப்பகுதியைச் சுற்றியுள்ள 11 மீனவ கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அங்கு 300 விசை படகுகள், 5,000 பைபர் படகுகள் இயங்குகின்றன. இந்நிலையில், துறைமுகம் முறையாக தூர்வாராத காரணத்தால் மணல் திட்டுகள் ஏற்பட்டு படகுகளை இயக்க முடியாமல் மீனவர்கள் தவித்து வந்தனர்.
இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு, புதுவை அரசைக் கண்டித்து அப்பகுதி மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, காரைக்கால் துறைமுக முகத்துவாரம் தூர்வாரும் பணியினை 60 லட்சம் ரூபாய் மதிப்பில் மாவட்ட ஆட்சியர் விக்ராந்த் ராஜா தொடங்கி வைத்து பணிகளை ஒரு மாதத்திற்குள் முடிக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனால் காரைக்கால் மேடு, கோட்டுச்சேரிமேடு, திருப்பட்டினம் உள்ளிட்ட 11 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்க:
சிறிய மீன்பிடித் துறைமுகத்திற்கு வழங்கப்பட்டது ஆணை - மீனவர்கள் மகிழ்ச்சி!
மல்லிப்பட்டின துறைமுகத்தில் தூண்டில் வளைவு அமைக்க மீனவர்கள் கோரிக்கை!