கர்நாடகா சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் உள்ள சிந்தமணி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் உள்பட சுகாதார ஊழியர்கள் 35க்கும் மேற்ப்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் கடந்த 13 நாள்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்டுவருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் ஆள் அரவம் இல்லாததால், அங்கு தெரு நாய்கள் நுழைந்து, நோயாளிகளின் படுக்கையில் ஹாயாக படுத்துள்ளன. அதுமட்டுமின்றி ஊழியர்களின் போராட்டத்தால், மருத்துவமனை தூய்மை இல்லாமல் உள்ளது. இதனால் நோயோடு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சைக்கு பதிலாக மீண்டும் ஒரு நோயை பரிசாக அளிக்கும் அவலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாக சமூக செயற்பாட்டாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க...பசுமை என்று பெயரிடப்பட்டுள்ள பேட்டரி ரயில்!