ஜம்மு-காஷ்மீரின் புட்காம் மாவட்டம், சடூராவில் உள்ள காவலர் முகாமிலிருந்து இரண்டு ஏ.கே 47 ரக துப்பாக்கிகள், மூன்று ஆவணங்களுடன் இன்று இன்று (அக்.14) சிறப்புக் காவலர் ஒருவர் மாயமாகியுள்ளார்.
இது குறித்து பேசிய உயர் காவல் அலுவலர்கள், "துப்பாக்கிகளுடன் காணாமல் போன சிறப்புக் காவலரை கண்டுபிடிக்க குழு ஒன்றை அமைத்துள்ளோம். காணாமல் போன சிறப்புக் காவலர் துப்பாக்கிச் சுடுவதில் பயிற்சி பெற்றவர் அல்ல. விரைவில் அவரைக் கண்டுபிடிப்போம்" எனத் தெரிவித்தனர்.
முன்னதாக, இரண்டு நாள்களுக்கு முன்பு, இதேபோல் புட்காம் மாவட்டத்தின் மற்றொரு முகாமில், காவலர் ஒருவர் துப்பாக்கியுடன் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் தகனம்!