ETV Bharat / bharat

பொதுவெளியில் எச்சில் உமிழ்ந்தால் கடும் நடவடிக்கை...! - நாராயணசாமி எச்சரிக்கை

புதுச்சேரி: பொதுவெளியில் எச்சில் துப்பினால் கடும் நடவடிக்கையும், அபராதமும் விதிக்கப்படுமென புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கைவிடுத்தார்.

பொதுவெளியில் எச்சில் துப்பாதீங்க...கடுமையான நடவடிக்கை பாயும்!

author img

By

Published : Apr 19, 2020, 10:38 AM IST

இது குறித்து அவர் கூறியதாவது: ”கரோனா பெருந்தொற்று பாதிப்பு காரணமாக பாதுகாக்கப்பட்ட பகுதியாக, சீல்வைக்கப்பட்டிருந்த காட்டேரிக்குப்பம் பகுதி இயல்புநிலைக்குத் திரும்புகிறது.

ஊரடங்கு நடவடிக்கையின்படி, அப்பகுதி மக்கள் நடந்துகொள்ள வேண்டும். உணவகங்கள் 20ஆம் தேதிக்குப் பிறகு இயங்கலாம். தனிநபர் இடைவெளியுடன் வாங்கிச் செல்ல மட்டுமே ஊரடங்கு நடவடிக்கைகள் மாற்றம் பெறுகின்றன.

பொதுவெளியில் எச்சில் துப்பாதீங்க... கடுமையான நடவடிக்கை பாயும்!

விடுமுறை நாள்களில் இறைச்சியை தனிநபர் இடைவெளியுடன் வழங்கவே அனுமதி வழங்கப்பட்டது. மீறினால், கடை உரிமம் ரத்துசெய்யப்படும். பொதுவெளிகளில் எச்சில் துப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கேரள மாநிலத்திற்கு அடுத்ததாக, புதுச்சேரி இருக்கிறது. இதற்கு, மாநில மக்களின் ஒத்துழைப்பே காரணம்” என்றார்.

இதையும் படிங்க: பிரசவம் குறித்து பெண்களுக்கு புரிதல் இருக்கிறதா? : எழுத்தாளர் ஆட்டோ சந்திரன் விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.