ETV Bharat / bharat

சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி கூட்டம்...! புறக்கணிக்கும் கட்சிகள் எவை? - புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

டெல்லி: காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Congress president Sonia Gandhi
Congress president Sonia Gandhi
author img

By

Published : May 22, 2020, 1:02 PM IST

நாடு முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் 25ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு சில தளர்வுகளுடன் நான்காம் கட்டமாக மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு, குறு நிறுவனங்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊரடங்கால் முடங்கியுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 20 லட்சம் கோடி ரூபாய்க்கு பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை அறிவித்தார். இது கண்துடைப்பு அறிவிப்பு என்றும் இதனால் தொழிலாளர்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் எந்த பயனும் கிடைக்காது என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன.

இந்நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சந்தித்து வரும் அவலங்கள் குறித்தும், பல்வேறு மாநிலங்களில் திருத்தப்பட்டுள்ள தொழிலாளர் நலச் சட்டங்கள் குறித்தும் விவாதிக்க எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்திருந்தார். எதிர்க்கட்சிகளின் இந்தக் கூட்டம் காணொலி காட்சி மூலம் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியுடன் புதிதாக கூட்டணி அமைத்துள்ள சிவசேனா கட்சித் தலைவரும் மஹாராஷ்டிரா முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

நாடு முழுவதும் கரோனா வைரஸால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில், திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், தேசிய மாநாடு கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்பதாக தெரிவித்துள்ளன.

இருந்தபோதிலும், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பும் வகையில் காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு பேருந்துகள் குறித்து கருத்துவேறுபாடு எழுந்ததால் பகுஜன் சமாஜ் கட்சியும், பல்வேறு காரணங்களால் வேறுபட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: 'குடிபெயர் தொழிலாளர்களுக்கு தானியம் மட்டுமல்ல, பணமும் தேவை'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.