முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினமான இன்று காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் அக்கட்சியின் கனவுத் திட்டமான ராஜீவ் காந்தி கிசான் யோஜ்னா தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தை காணொலி காட்சி மூலம் கட்சித் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கிவைத்தனர். விழாவில் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் மற்றும் மாநிலத் தலைவர்கள் உடனிருந்தனர்.
இந்த திட்டம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசுகையில், இதுபோன்ற புரட்சிகரமான திட்டம் மக்களின் வாழ்வில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தி, ஏழைகளின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற சிறந்த திட்டத்தை அமல்படுத்துவதே ராஜீவ் காந்திக்கு நாம் செய்யும் அஞ்சலி. இந்த திட்டம் நிலமற்ற கூலித் தொழிலாளர்களுக்கு நேரடி பண உதவியை உறுதிசெய்யும். இது போன்ற தனித்தன்மையான திட்டம் மக்களை தன்னிறைவை நோக்கி சென்று சேர்க்கும் என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் மூலம் முதல்கட்டமாக 19 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பீகாரில் ஆன்லைன் மூலம் மீன் டெலிவரி செயலி அறிமுகம்!