ETV Bharat / bharat

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 6 பேருக்கு பன்றிக்காய்ச்சல்! - டெல்லி நீதிமன்றத்தில் பன்றிக்காய்ச்சல்

டெல்லி: உச்ச நீதிமன்றத்தைச் சேர்ந்த 6 நீதிபதிகளுக்கு பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிற நீதிபதிகள் முகமூடி (மாஸ்க்) அணிந்து நீதிமன்றம் வந்தனர்.

supreme court
உச்ச நீதிமன்றம்
author img

By

Published : Feb 25, 2020, 8:58 PM IST

இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, எஸ்.ஏ போப்டே. அவருக்கு அடுத்தது உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 33 நீதிபதிகள் இருக்கிறார்கள். இவர்களில் 6 நீதிபதிகளுக்கு பன்றிக்காய்ச்சல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வைரஸ் பாதித்துள்ள நீதிபதிகள் நீதிமன்றத்திற்கு வராமல் விடுப்பில் உள்ளனர். இதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்ஜீவ் கண்ணா நீதிமன்றத்திற்கு மாஸ்க் அணிந்து வந்திருந்தார்.

இதுகுறித்து மூத்த நீதிபதி டிஒய் சந்திரசூட், ”உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்குரைஞர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி, நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

இதையடுத்து, உச்ச நீதிமன்ற பார் அசோசியேசன் தலைவர் துஷ்யந்த் தேவ், இந்த மருத்துவ அவசரநிலையை சமாளிக்க கலந்தாலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. இது தொடர்பான அவசரகால சூழ்நிலைகளை கவனித்துக்கொள்வதற்கும் தேவையான வழிமுறைகளையும் பின்பற்ற அறிவுறுத்தியுள்ளோம்.

நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சட்ட மாநாட்டில் கலந்து கொண்ட சில வெளிநாட்டு தூதுவர்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

பன்றிக்காய்ச்சலில் பாதிக்கப்பட்ட இரண்டு நீதிபதிகள் சபரிமலை வழக்கை விசாரித்த 9 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ‘இந்தியர்களின் பெருந்தன்மையைக் கண்டு வியந்தோம்’ - ட்ரம்ப் நெகிழ்ச்சி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.