உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் இன்று 2020ஆம் ஆண்டு பயிற்சி முடித்த வீரர்களின் அணிவகுப்பு விழா நடைபெற்றது. இதில் ராணுவத் தளபதி நரவணே தலைமை தாங்கி வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய-சீன எல்லைப் பிரச்னை தொடர்பான கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் பேசுகையில், ”சீனாவுடனான நமது எல்லைப் பகுதியில் அனைத்து நடவடிக்கைகளும் கட்டுக்குள் உள்ளன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இருநாட்டு ராணுவத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்தவர்கள் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், கீழ்மட்ட அலுவலர்கள் பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்றுவருகிறது.
இரு தரப்பும் பேச்சுவாரத்தை மூலம் பல்வேறு சிக்கல்களைக் களைந்துள்ள நிலையில், தற்போது நிலைமை சீரடையத் தொடங்கியுள்ளது. மற்றொரு அண்டை நாடான நேபாளத்துடன் நீண்ட காலமாகவே நட்புறவுடன் இருந்துவருகிறோம்” என்றார். இந்த நட்பு எதிர்காலத்திலும் தொடரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்திய ராணுவ அகாதமியில் பயிற்சி: ராணுவத்தில் இணையும் 333 வீரர்கள்