அமெரிக்கா சென்ற மோடி அந்நாட்டில் வாழும் இந்தியர்கள் நடத்திய பிரமாண்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஹூஸ்டன் நகரில் 'ஹவுடி மோடி' என பெயரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அந்நாட்டு அதிபர் ட்ரம்பும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்பு ஆகியோரை சிறுவன் ஒருவன் தடுத்து நிறுத்தி செல்ஃபி எடுத்துக் கொண்டான்.
அருகிலிருந்த மாணவர்கள் இதனைப் பார்த்து பிரமிப்படைந்தனர். பின்னர், தான் எடுத்துக்கொண்ட செல்ஃபியை சமூகவலைதளத்தில் அந்த சிறுவன் பகிர்ந்து கொண்டான். இதனையடுத்து இப்புகைப்படம் வைரலாகியுள்ளது.
இந்த மாணவன் பெயர் சாத்விக் ஹேட்ஜி எனவும், இவர் ஆறாம் வகுப்பு படித்துவருகிறான் எனவும் தெரியவந்துள்ளது. மேலும், நிகழ்ச்சியில் சாத்விக் சூர்யநமஸ்காரம் செய்துள்ளான் எனவும் தெரியவந்துள்ளது. கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட அந்த சிறுவனின் பெற்றோர்கள் 17 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவிற்கு சென்றுள்ளனர். அந்த சிறுவனின் தாயார் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.