சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலரின் 161ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரி - கடலூர் சாலையிலுள்ள அவரது சிலைக்கு, அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு சிங்காரவேலரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், சட்டப்பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து ஆகியோரும் மாலை அணிவித்தனர். புதுச்சேரி பாஜக தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சுவாமிநாதன் தலைமையில் அக்கட்சியினர் சிங்காரவேலரின் சிலைக்கு மாலை அணிவித்தனர். தொடர்ந்து மீனவர் அமைப்பினர் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க: மத்திய - மாநில அரசுகளின் பட்ஜெட்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!