ETV Bharat / bharat

சீன - இந்திய மோதல் : ஓர் எச்சரிக்கை ஒலி - சீன இந்திய மோதல்கள்

இந்தியாவும் சீனாவும் தங்களிடையேயான நட்புறவு நல்ல விதத்தில் தொடர வேண்டும் எனக் கருதும் பட்சத்தில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு குறித்து கூடுமான வரையில் விரைந்து உறுதி செய்து தெளிவுபடுத்த வேண்டும் என ஓய்வு பெற்ற அரசு தூதர் அசோக் காந்தா தெரிவிக்கிறார்.

Ashok Kantha special interview
Ashok Kantha special interview
author img

By

Published : Jun 18, 2020, 8:32 PM IST

Updated : Jun 19, 2020, 4:35 PM IST

சீனாவுக்கான இந்தியாவின் முன்னாள் தூதரான அசோக் காந்தா, தற்போது ஐசிஎஸ் (இன்ஸ்டிட்யூட் ஆஃப் சைனீஸ் ஸ்டடீஸ் – சீனக் கல்விக்கான பயிலகம்) அமைப்பின் இயக்குநராக உள்ளார். இந்தியாவும் சீனாவும் எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு காணாவிட்டால், குறைந்தபட்சம் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த கால்வான் கணவாய் மோதல் போன்ற கொடூரமான சம்பவங்கள் நீடிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய - சீன விவகாரம் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், பதற்றத்தைத் தணிக்க மோதாமல் விலகியிருக்கும் செயல்முறையைத் தொடர்வதற்கு உடனடி முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்றும், இதற்கு அரசிடமிருந்து தெளிவான உத்தரவுகள் கொடுக்கப்பட வேண்டும் என்றும் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

”பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்ளாத நிலையில் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இது உகந்த தருணமாக இல்லாமல் போனாலும்கூட, ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தைகளைப்போல் உயர் நிலையிலான அரசியல், தூதரக மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும். ஆனால் அவை போதுமான அளவில் நடைபெறவில்லை” என்றும் அசோக் காந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் ”எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு காணும் நடைமுறையை சீனா கடந்த 18 ஆண்டுகளாக வேண்டுமென்றே சிக்கலாக வைத்துள்ளது. ஏனெனில் இந்தப் பிரச்னையில் குழப்பநிலை நீடிப்பதை இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்தலாம் என அது விரும்புவதே இதற்குக் காரணம்” என அவர் தெரிவித்துள்ளார்.

அஷோக் காந்தாவின் விரிவான பேட்டி பின்வருமாறு :

கேள்வி : இந்திய – சீன எல்லையில் பல ஆண்டுகளாக அமைதியும் இணக்கமும் நிலவி வந்த நிலையில், தற்போது எழுந்துள்ள மூர்க்கமான மோதல்களை அடுத்து எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டின் தன்மை நிரந்தரமாக மாறிப் போய் விட்டதா?

பேட்டி

பதில் : மிகவும் துரதிஷ்டவசமான ஏதோ ஒன்று தெளிவாக நிகழ்ந்துள்ளது. கடந்த 45 ஆண்டுகளாக, எல்ஏசி, சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் எல்லை வரையறை குறித்த பிரச்னைகள் நமக்கு இருந்த போதிலும், இந்தியாவும் சீனாவும் ஒருங்கிணைந்து, எல்ஏசி பகுதியில் அமைதி நிலவுவதை உறுதி செய்துள்ளன. 1975இல் இருந்து எந்த ஒரு தரப்பிலும் உயரிழப்பை ஏற்படுத்தக்கூடிய வேறு எந்தச் சம்பவங்களும் நிகழவில்லை. அது நம் பின்னால் உள்ளது. மிகுந்த கவலை தரக்கூடிய வகையிலான தற்போதைய நிலைமையில் இருந்து எப்படி முன்னேறிச் செல்வது என்பதை நாம் பார்க்க வேண்டியது அவசியம். தற்போது நாம் உள்ள இக்கட்டான நிலைமையின் வீரியத்தை நாம் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. பிரச்னையை மேலும் அதிகரித்து விடாத வகையில் நாம் செயலாற்றுவதற்கான வழியைக் காண வேண்டியது அவசியம். நாம் அதனை ஒதுக்கித்தள்ளிவிட முடியாது. முட்டி மோதிக்கொண்டு நிற்கும் முற்றுகைச் சூழ்நிலை ஏற்பட்டபோதே, ஆயுதம் தாங்கிய வீரர்கள் ஒருவரை ஒருவர் முறைத்துக்கொண்டு நிற்பது மிக நீண்ட காலத்துக்கும் மேலாக நீடிக்கும்போது, எதிர்பாராத நிகழ்வு ஏற்பட்டுவிடக்கூடிய வாய்ப்புகள் எப்போதுமே உள்ளன என்று நாம் சொன்னோம். அதுதான் திங்கள்கிழமை மாலையில் நிகழ்ந்துள்ளது.

இரு புறங்களிலும் இருந்து மிகத் தெளிவான அரசு சார்ந்த உத்தரவுகள், சம்பந்தப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படைகளுக்கு கொடுக்கப்பட்டு, எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக பதற்ற நிலைமையைத் தணிப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம். அதன் பின்னர் நிலைமையை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும்.

பேட்டி

கேள்வி : சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள ராணுவ வீரர்கள் உணர்ச்சிப் பெருக்கோடும் புண்பட்ட மனதோடும் மாறுபாடுடைய மனநிலையோடும் இருக்கும்போது பதற்றத்தைத் தணிக்கும் நடைமுறை, மிகுந்த சிக்கலானதாக இருக்கும் அல்லவா? முற்றுகைப் போக்கு நீடிக்கும் நிலையில், இதர முனைகளில் கடுமையான வன்முறை வெடிப்பது உள்பட நிலைமையை மேலும் மோசமடையச் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது அல்லவா?

பதில் : எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டினை ஒட்டிய வேறு ஏதேனும் முனையில் வன்முறை வெடிக்க வாய்ப்பு இருப்பதை நான் மறுக்க மாட்டேன். அதேநேரத்தில், அந்த வன்முறை மிகப் பெரிய அளவிலான சண்டையாக மாறிவிடாமல் இருக்க வேண்டும் என இரு தரப்பினரும் விரும்புவார்கள் என்ற நம்பிக்கை எனக்குப் போதுமான அளவில் உள்ளது. உண்மையில், இந்தியாவும் சீனாவும் எல்லைப் பகுதிகளில் அமைதி, இணக்கத்தைப் பராமரிப்பதற்கு ஏராளமாக முதலீடுகளை செய்துள்ளன. எல்லைப் பகுதிகளில் அமைதி நீடிக்க வேண்டும் என்பதற்காக, சிபிஎம்கள் (நம்பிக்கை ஊட்டும் நடவடிக்கைகள்), எஸ்ஓபிக்கள் (நிலைப்படுத்தப்பட்ட செயல்பாட்டு நடைமுறைகள்) போன்ற விரிவான கட்டமைப்புகளை நாம் உருவாக்கி உள்ளோம்.

ஆனால், இந்த விஷயத்தில் அது சரியாக செயலாற்றவில்லை. ஆகையால் நாம் சில சுய பரிசோதனைகளை செய்து கொண்டு, அதற்கேற்ப சில உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். மேற்கொண்டு பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம் என்ற தெளிவான செய்தி அடிமட்டம் வரை செல்ல வேண்டும். பதற்றத்தைத் தணித்தல், மோதாமல் விலகியிருத்தல் ஆகியவற்றுக்கான நடைமுறை கட்டாயம் தொடர வேண்டும். அதன் மூலமாக முன்பிருந்த நிலையை மீண்டும் கொண்டு வருவது உள்ளிட்ட நியாயமான முடிவுகள் காணப்பட வேண்டும். நடப்பு ஆண்டு ஏப்ரல் முதல் சீனத் தரப்பினர், தங்களது ஒருதரப்பிலான நடவடிக்கை மூலம் எடுத்துக்கொண்ட ஆதாயங்களை அவர்களே தக்கவைத்துக் கொள்வது போன்ற நிலைமையை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

பேட்டி

அண்மையில் நடந்து முடிந்த நிகழ்வுக்கு முன்னால் ஏப்ரலில் இருந்ததைப் போன்ற நிலைமையை மீட்டெடுப்பது மிகவும் முக்கியம் ஆகும். பின்னர் எஸ்ஓபி நடவடிக்கைகளை, எங்கே தவறு நிகழ்ந்தது என்பதைக் கண்டறிவதற்காக நாம் மறுமதிப்பீடு செய்ய வேண்டியது அவசியம். அதற்கு இணையான வகையில் முன்னோக்கிப் பார்த்து, தேவையான மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதும் அவசியம் ஆகும்.

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு வரையறை தொடர்பாக மிகப் பெரிய குழப்பம் உள்ள தற்போதைய சூழ்நிலையை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. எல்ஏசியை நாம் தெளிவுபடுத்தி உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பாக முறையான புரிந்துணர்வு நம்மிடம் உள்ளது. வரைபடங்களை பரிமாறிக் கொள்ளுதல், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு குறித்த பொதுவான புரிந்துணர்வை நோக்கி முன்னேறிச் செல்லுதல் ஆகியவற்றுக்கு நாம் ஒப்புக் கொண்டுள்ளோம். அந்த நடைமுறையை சீனத் தரப்பு கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக அடைத்து வைத்துள்ளது.

இந்தச் சம்பவம் ஓர் எச்சரிக்கை ஒலியாக இருக்க வேண்டும். இந்த நடைமுறையை நாம் மீண்டும் தொடங்க வேண்டும். எல்லை தொடர்பான கேள்வியில் இத்தகைய பலத்த வேறுபாடுகள் உள்ள நிலையில், கால வரையறை இல்லாமல் இந்த சூழ்நிலையிலேயே நாம் உண்மையில் வாழ முடியுமா? எல்லை தொடர்பான கேள்விக்கு அரசியல் ரீதியிலான தீர்வு காண்பதற்காக, 2003ஆம் ஆண்டில் இருந்து இதற்கான பணி, இரண்டு எஸ்ஆர்களிடம் (சிறப்புப் பிரதிநிதிகளிடம்) கொடுக்கப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் 2005ஆம் ஆண்டில் அவர்கள் ஒரு சிறந்த முன்னேற்றத்தைக் கொண்டு வந்தார்கள், அப்போது நாம் எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கான வழிகாட்டும் நெறிமுறைகளையும், அரசியல் சார்ந்த அளவு கோல்களையும் ஏற்றுக் கொண்டோம். அதன் பின்னர் எந்த ஓர் அசலான முன்னேற்றமும் ஏற்பட்டுவிடவில்லை. அவர்கள் மூல முதல் கட்டளையை உற்றுநோக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இது கால வரையறை இல்லாமல் நாம் ஒத்திப்போட்டு வைக்கின்ற பிரச்னை அல்ல. அவ்வாறு நாம் செய்தால், கால்வான் கணவாயில் என்ன நிகழ்ந்ததோ அது போன்ற கொடூரமான நிகழ்வுகளை சந்திப்பதன் வாயிலாக பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

கேள்வி : ஏற்கெனவே உள்ள இயங்கு முறைகள், எல்லைத் தொடர்பான நெறிமுறைகளின் ஆயுள் காலம் முடிவுக்கு வந்துவிட்டனவா?

பதில் : ஏற்கெனவே உள்ள எஸ்ஓபிக்கள் அல்லது சிபிஎம்கள் ஆகியவற்றின் ஆயுள் காலம் (காலக்கெடு) முடிவடைந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. அவற்றில் சில நடவடிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நான் மிக நெருக்கமாகத் தொடர்பு கொண்டுள்ளேன். அவை மிகவும் சிறப்பானவை என்று உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். அவற்றில் விடுபட்டுப்போவது என்னவென்றால், அந்த சிபிஎம்கள் தகுந்தபடி செயல்படுத்தப்படுவதில்லை என்பதுதான்.

நாம் நமது குழந்தையை, குளியல் தொட்டியில் வீசி எறிந்து விடக்கூடாது. நாம் முன்னெடுத்துள்ள நம்பிக்கை உருவாக்க (சிபிஎம்) நடவடிக்கைகளை, இரு தரப்பிலும் மதித்து நடப்பதற்கான புதுப்பிக்கப்பட்ட வாக்குறுதியுடன், அவற்றை செயலாற்றுவதிலும் நாம் உறுதியாக நிற்க வேண்டும். நாம் ஒப்புக்கொள்ளக் கூடிய எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை எவ்வித பிசிறுமின்றி நாம் மதிக்க வேண்டும்.

கேள்வி : பிரதமர் மோடிக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கும் இடையே இப்போதே நேரடிப் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டுமா, அல்லது உயிரிழந்தோரின் எண்ணிக்கையைப் பார்க்கையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இது உகந்தத் தருணம் கிடையாதா?

பதில் : முழுமையான தகவல்களை அறிந்துகொள்ளாத நிலையில், பிரதமர் மோடி தொலைபேசியை எடுத்து சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச வேண்டும் என்ற யோசனையைத் தெரிவிக்க நான் விரும்பவில்லை. ஆனால், தூதரக வழிமுறைகள் வாயிலாக, மிகவும் உயர்ந்த மட்டத்திலான தொடர்புகள் மூலமான பேச்சுவார்த்தை கட்டாயம் தேவை. எல்லைப்புற கமாண்டர்கள் இடையேயான சந்திப்புகள் நடைபெறுவதும் பயன் தரும். அதே நேரத்தில் அந்த வழிமுறையிலான பேச்சுவார்த்தை பயன் தரும் என்ற போதிலும் போதுமானதாக இருக்காது என்றே நாம் கருதி வந்துள்ளோம். தூதரக மட்டத்திலும் அரசாங்க ரீதியிலும் மிகுந்த தகவல் தொடர்புகளை நாம் ஏற்படுத்த வேண்டியது அவசியம். எல்லைப் பிரச்னையை கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள இரு நாடுகளின் சிறப்புப் பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையாக அது இருக்கலாம்.

கேள்வி: அரசாங்க மட்டத்திலான உத்தரவுகள் உள்ளூர் கமாண்டோக்கள் வரை சென்று சேருகின்றனவா? அண்மைக்கால ஊடுருவல்கள், குறைந்தபட்சம் சீன ராணுவத்தின் மேற்கு கமாண்ட் பிரிவின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு, முன்கூட்டியே திட்டமிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டவை என்று நிபுணர்கள் நம்புகின்றனர். எனவே, அரசாங்க ரீதியிலான தகவல் அனுப்புதல் உதவுமா?

பதில் : இவை உள்ளூர் மட்டத்தில் எழுந்த சம்பவங்கள் அல்ல என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. கடந்த மே ஐந்தாம் தேதி முதல் நாம் காணுகின்ற பெரும்பாலான ஊடுருவல்கள், எல்லைப் புற சம்பவங்கள், சிக்கிம் முதல் மேற்குப் பிரிவு வரையிலான மிகப் பரந்த எல்லைப் பகுதிகளுக்கு இடையேதான் நிகழ்ந்துள்ளன. சீனாவின் அதிகாரப் படிநிலையில் மிக உயர்ந்த மட்டத்தில் இருந்து முடிவு எடுக்காமல், இதுபோல் பல்வேறு இடங்களில் பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்திருக்க முடியாது என்பதில் சந்தேகம் இல்லை.

சீனத் தரப்பில் அப்படி ஒரு முடிவை எடுத்திருக்க முடியும் என்ற போதிலும், எல்லைப் புறப் பகுதிகளில் அமைதியும் இணக்கமும் திரும்புவதை உறுதி செய்வதில் சீனத் தரப்பிடம் ஆர்வம் இருக்காது என்று அதற்குப் பொருள் கொள்ளத் தேவையில்லை. நம்மைப் போலவே சீனத் தரப்பில் இருந்தும், எல்லைப் புறப் பகுதிகளில் அமைதியை உறுதி செய்வதற்கு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் கடுமையான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு இதுவே நமக்கு சரியான தருணம். நாம் சீனாவுடன் மிகுந்த சிக்கலான, குழப்பமான உறவைக் கொண்டுள்ளோம்.

கேள்வி : ஆயினும், இந்தியர்களை குத்துவதற்கான நெம்புகோலாகப் பயன்படும் என்பதால் குழப்பமான எல்லையே நீடிக்கட்டும் என்று கருதி, ஒருவேளை சீனர்கள் அதற்கு முன்னுரிமை தருகின்ற பட்சத்தில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை தெளிவுபடுத்துவது, உறுதிப்படுத்துவது பொருந்துமா?

பதில் : எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை வரையறுப்பதில் குழப்பமான நிலையே நீடிக்க வேண்டும் என சீனத் தரப்பு விரும்பலாம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அது அவர்களுக்கு பொருந்தக்கூடியதே. அதனால்தான், எல்ஏசி தொடர்பான பொதுவான புரிந்துணர்வை நோக்கி முன்னேற வேண்டும் என்பதற்காக இரு தரப்புக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட முறையான ஒப்புதல்கள், எழுத்துப் பூர்வமான ஒப்பந்தங்கள் இருந்த போதிலும், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு குறித்து தெளிவு ஏற்படுத்தும் நடைமுறையை கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் சிக்கலாக்கி வருகின்றனர்.

ஆயினும், இந்திய – சீன உறவு நேர்மறையான திசையில் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றால், எல்லைப் புறப் பகுதிகளில் அமைதி நீடிக்க வேண்டும் என்ற தகவலை, சீனத் தரப்பிடம் நாம் மிகுந்த வலிமையோடு திரும்பக் கூற வேண்டியது அவசியம் ஆகும். இந்திய – சீன உறவுகள் ஆக்கப்பூர்வமான வகையில் நீடிக்க வேண்டும் என்றால், அமைதியான எல்லை குறித்து இரு தரப்புக்கும் இடையே மிகச் சிறந்த புரிந்துணர்வு இருக்க வேண்டியது ஒரு முன் நிபந்தனை ஆகும்.

கேள்வி : முன்பிருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்பதை சீனா ஒப்புக் கொள்ளுமா?

பதில் : சீன ராணுவத்தின் மேற்கு கமாண்ட் பிரிவின் செய்தித் தொடர்பாளர், கால்வான் நதிப் பகுதி முழுவதிலுமே சீனாவுக்கு ஆட்சி அதிகாரம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதற்கு, தற்போதுள்ள நிலையை ஒருதரப்பாக மாற்றுவதற்கு சீனா முயற்சி செய்வதாக இந்திய வெளியுறவுத் துறை பதில் அளித்துள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு என்பது ஆட்சியதிகாரம் பற்றியது அல்ல. அது கொடுக்கப்பட்ட நிலை பற்றியது. ஆகவே, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை மாற்றக் கூடாது என்பதை இரு தரப்புமே ஒப்புக் கொண்டுள்ளன. ஆனால், அண்மை வாரங்களில் சீனர்கள் செய்தது என்ன என்றால், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை மாற்ற முயன்றதுதான்.

திங்கள்கிழமை என்ன நடந்தது என்பதை வெளியுறவுத் துறை அறிக்கையைப் பார்த்தால் தெரியும். ஜூன் 6ஆம் தேதி இருநாட்டு எல்லைப்புற கமாண்டர்கள் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்ட போதிலும், அதனை மீறி கால்வான் ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியில் தற்போதைய நிலையை மாற்றுவதற்கான முயற்சி சீனத் தரப்பில் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகையால், நமது தரப்பிலான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்தான் நடுவாந்திரப் பகுதி அமைய வேண்டும் என்று பேச்சு நடைபெறுவதாக சில ஊடகங்களில் வெளியான தகவல்களால், நான் சற்று வருத்தம் அடைந்துள்ளேன்.

நமது தரப்பில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் நாம் மேற்கொண்டு வருகின்ற ரோந்து நடவடிக்கைகள் மீதான எந்தவொரு கட்டுப்பாட்டையும் நாம் ஏற்றுக் கொள்ளக்கூடாது. சீனத் துருப்புகள் அவர்களது தரப்பிலான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிக்கு திரும்பச் செல்ல வேண்டும் என்பது மாத்திரம் அல்ல, நமது தரப்பிலான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், நமது ரோந்துப் பணிக்கு எவ்விதத் தடையும் இருக்கக்கூடாது. நமது எல்லையில் அடிப்படைக் கட்டுமானங்களை மேம்படுத்துவதற்கு எந்தத் தடையும் இருக்கக்கூடாது என்பதிலும் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.

கேள்வி : முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான எஸ்.எஸ்.மேனன் ஒரு பேட்டியில், ஊடகங்களில் இதுபோன்ற பேச்சுவார்த்தைகள் பற்றி பகிரங்கமாகப் பேசக்கூடாது என்று கூறியிருக்கிறார். ஆனால் அமைதி காப்பதை, பேச்சுவார்த்தை நடத்தாத விஷயங்களை நாம் ஒப்புக்கொண்டு விட்டதாக சீனர்கள் நினைத்து விடக் கூடும் அல்லவா?

பதில் : எல்லையில் நடந்த கொலைகள் தொடர்பாக கடந்த 24 மணி நேரத்தில் எந்தவொரு அறிக்கையையும் பிரதமர் மோடி வெளியிடவில்லை, இந்த அமைதி உகந்ததா? எல்லைப் பிரச்னை தொடர்பான பேச்சுவார்த்தைகள் எல்லாம் இயல்பிலேயே உணர்ச்சிப் பூர்வமானவை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அவை ஊடகங்கள் மூலம் நடத்தப்படக் கூடாது. சிறப்பான வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டியதும் அவசியம். முன்பு இவற்றில் பங்கெடுத்தவன் என்ற வகையில், ஓர் எல்லைக்கு மேல் பொது வெளியிலே உண்மைத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள முடியாது என்பதை நான் அறிவேன். ஆனாலும், நமது தரப்பில் இருந்து சிறப்பான தகவல் தொடர்பு இருக்க வேண்டும். மேலும், தகவல் கசிவுகள், அறியாமையின் அடிப்படையில் தோன்றக் கூடிய ஊகங்களை நாம் கட்டாயம் தடுக்க வேண்டும். அவை தவிர்க்கப்பட வேண்டியவை.

கேள்வி : பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கடந்த ஆறு ஆண்டுகளில் 14 முறை சந்தித்துள்ளனர். பிரதமர் ஐந்து முறை சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இது, அவரது சீன அரசியல் உறவில் ஏற்பட்ட தோல்வியா?

பதில் : பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருக்கு இடையேயான தொடர்புகள் நீடிப்பது மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்துள்ளது. இயல்பாகவே சிக்கலானதாக, குழப்பமானதாக, கடினமானதாக உள்ள இருநாட்டு நல்லுறவை மேம்படுத்துவதில் இந்தியாவும் சீனாவும் ஈடுபட்டுள்ளன என்பதை உறுதி செய்வதற்கு, உயர்நிலை அளவிலான சந்திப்புகள் நிகழ்ந்துள்ளன. இவற்றில் உயர்வுகளையும் தாழ்வுகளையும் நாம் கண்டுள்ளோம். தற்போது நாம் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறோம். இருப்பினும், அரசியல் தலைவர்கள் இடையேயான சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றே நான் கருதுகிறேன். அவற்றை நாம் கேள்வி கேட்க முடியாது.

இதையும் படிங்க...இந்திய- சீனா மோதல்: இரண்டு ஒடிசா வீரர்கள் வீர மரணம்!

Last Updated : Jun 19, 2020, 4:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.