அமெரிக்கா-சீனா இடையே கடந்த ஒரு வருடமாக வர்த்தகப் போர் நீடித்து வருகிறது. இருநாடுகளும் அவரவர் பொருட்கள் மீது பரஸ்பரம் கூடுதல் வரி விதித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக டெல்லியில் நடைபெற்ற இந்திய பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய சிங்கப்பூர் துணைப் பிரதமர் ஹங் ஸ்வீ கீட், "அமெரிக்கா-சீனா வர்த்தகப் போரால் உலக விநியோக சங்கிலியில் தடை ஏற்படலாம். ஸ்திரத்தன்மையற்ற காலத்தை எதிர்கொள்ள நாம் தாயாராக இருக்கவேண்டும். ஏனெனில் முன்பிருந்த உபரி மற்றும் பற்றாக்குறை பிரச்னைகளோடு யார் சிறந்த தொழில்நுட்பங்களை வைத்துள்ளனர் என்ற போட்டி நிலவி வருவதையும் பார்க்க முடிகிறது. சர்வதேச தொழில்நுட்பச் சங்கிலி அறும் அபாயமும் எழுந்துள்ளது" என்றார்.
தொடர்ந்து பொருளாதாரத்தை எப்படி புத்துயிர் பெறச் செய்வதென்பது குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, " இதற்கு அமைப்பு சார்ந்த கொள்கைகள் தேவைப்படும், முதலீடுகள் மீதான விதிகள், ஒழுங்குமுறைகள் ஆகியவற்றில் மாற்றம் கொண்டுவர வேண்டும் " என்றார்.
இதையும் படிங்க: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மொத்த உள்நாட்டு உற்பத்தியை நம்பி உள்ளதா ?