ETV Bharat / bharat

'இணை அமைச்சர் ஸ்ரீபாட் நாயக் ஆபத்து கட்டத்தை தாண்டிவிட்டார்' - அமைச்சர் ராஜ்நாத் சிங்

author img

By

Published : Jan 12, 2021, 10:55 PM IST

பனாஜி: விபத்தில் படுகாயமடைந்த மத்திய ஆயுஷ் இணை அமைச்சர் ஸ்ரீபாட் நாயக்கின் உடல்நிலை ஆபத்து கட்டத்தைத் தாண்டி விட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பனாஜி
பனாஜி

மத்திய ஆயுஷ் இணை அமைச்சர் ஸ்ரீபாட் நாயக், கர்நாடகா மாநிலம், உத்தர கன்னட மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கார் விபத்துக்குள்ளானது. இதில், அமைச்சரின் மனைவி, தனிச்செயலாளர் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இதில், படுகாயமடைந்த அமைச்சர், கோவா மருத்துவக் கல்லூரியின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சரின் உடல்நிலை குறித்து பிரதமர் உட்பட முக்கிய தலைவர்கள் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், " அமைச்சரின் உடல்நிலை குறித்து கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்துடன் பேசினேன். பிரதமர் மோடியும் அவருடன் பேசினார். நான் கோவா செல்வது குறித்து யோசனை செய்து வருகிறேன். தற்போது, மத்திய அமைச்சர் ஸ்ரீபாட் நாயக்கின் உடல்நிலையில் முன்னெற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் ஆபத்து கட்டத்தை தாண்டிவிட்டார். தேவைப்பட்டால், அவரை டெல்லிக்கு கொண்டு சென்று சிகிச்சையளிப்போம்" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையில், அமைச்சர் சிகிச்சை தொடர்பாக மருத்துவமனையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திடுமாறு, கோவா முதலமைச்சரிடம் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.