ETV Bharat / bharat

வணிகர் இல்லாத கடைகள் : ஐஸ்வாலில் இருந்து சுவிட்சர்லாந்துவரை

எந்த ஒரு வியாபாரத்திலும் நம்பிக்கையும் நாணயமும் நுகர்வோர் நடத்தையை தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இதற்கு நேர்மாறாக, வாடிக்கையாளர்களின் நாணயத்தில் நம்பிக்கை கொண்டு செயல்படும் ஆளில்லா கடைகள் நேர்மையைக் கைவிடுவதில்லை என்பதற்கு வாழும் உதாரணங்களாய் இருக்கின்றன என இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் பேராசிரியர் அத்தனு பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார்.

கடை
கடை
author img

By

Published : Jul 3, 2020, 5:16 PM IST

Updated : Jul 3, 2020, 5:23 PM IST

அது ஒரு வித்தியாசமான செய்திதாள் கடை. எங்கள் பஸ் நிறுத்தத்திற்கு அருகில்தான் உள்ளது. ஆனால், பாதி நேரம் ஆள் இல்லாமல் இருந்தாலும் வாடிக்கையாளர்கள் அங்கிருந்து செய்தித்தாள்களை எடுத்துக்கொண்டு உரிய பணத்தை ஒரு மூலையில் வைக்கப்பட்டுள்ள திறந்த தட்டில் இட்டுச் செல்கின்றனர். இதனை தினமும் பார்க்கும் எனக்கு வியப்புதான்.

ஆர்வ மேலீட்டால் ஒருமுறை, கடை உரிமையாளரிடம் இது குறித்து கேட்டும்விட்டேன். தனது மற்ற தொழிலான தண்ணீர்-கேன் வழங்குவதிலும் அவர் ஈடுபட்டிருப்பதால், அவர் இல்லாவிட்டாலும்கூட செய்தித்தாள் விற்பனையில் எந்த பிரச்னையும் இல்லை. செய்தித்தாள்களுக்கான பணம் சரியாகக் கிடைக்கிறது என்று சர்வ சாதாரணமாக பதிலளித்தார் அவர்.

புதுமையும் விநோதமும்: நேர்மையே அடித்தளம்

உலகெங்கிலும் பெரும்பாலான மக்கள் நேர்மையானவர்கள்தான். சந்தேகமேயில்லை. இதில் விநோதம் என்னவென்றால், அவ்வப்போது நேர்மை கவனத்தைக் கவர்ந்திழுப்பதாக அமைகிறது. எடுத்துக்காட்டாக, மிசோரம் தலைநகர், ஐஸ்வாலில் இருந்து நெடுஞ்சாலையில் 65 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள செல்லிங் கிராமத்தில், உள்ளூர் சமூகம் தங்களுக்குள்ளாக ஒரு புதுமையான கிராம அளவிலான அடித்தட்டு மக்களுக்கான வர்த்தகத்தை உருவாக்கியுள்ளது. இது “ங்காஹ் லூ தவ்ர் முறைமை” என அழைக்கப்படுகிறது. இது நேர்மையை அடிப்படையாகக் கொண்டது. குடியிருக்கும் மூங்கில் குடிசைகளே ஆளில்லா கடைகளாகவும் செயல்படுகின்றன. வீட்டுக்கு வீடும் ஆயிற்று, கடைக்கு கடையும் ஆயிற்றல்லவா? அவ்வாறு செயல்படும் குடிசைக் கடைகளில், பொருள்களின் பெயர், விலை ஆகியவற்றுடன் சிறிய அடையாளப் பலகைகள் தொங்கவிடப்படுகின்றன.

காய்கறிகள், பழங்கள், பூக்கள் அவ்வப்போது பழச்சாறு பாட்டில்கள், கருவாடு, நன்னீர் நத்தைகள் உள்ளிட்டவை இங்கு விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. விலைப் பட்டியல் கரிக்கட்டை அல்லது சாக்பீஸ் பயன்படுத்தி எழுதப்பட்டிருக்கும். வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை எடுத்துக்கொண்டு அவற்றுக்குரிய பணத்தை இங்குள்ள பணப்பெட்டியில் போட்டுவிடலாம். தேவைப்பட்டால், வாடிக்கையாளர்கள் பணப் பெட்டியிலிருந்து சில்லறை மாற்றிக் கொள்ளலாம்.

இக்கடைகளில் நம்பிக்கை என்னும் வாழ்வியல் அறம் மிக எளிமையாக செயல்படுகிறது. கடை உரிமையாளர்கள் அருகில் உள்ள தமது தோட்டத்திற்கோ அல்லது விவசாய நிலத்திற்கோ சென்று அங்குள்ள வேலையில் ஈடுபடுகிறார்கள். வனப்பகுதியை ஒட்டிய மலைப் பிரதேசங்களில், ஒரே இடத்தில் தொடர்ந்து பயிரிடுவதைத் தவிர்த்து, இடம் மாற்றி விவசாயம் செய்வது வழமையான ஒன்று. எனவே குடும்பத்தில் உள்ள அனைவருமே விவசாய வேலைகளில் ஈடுபடவேண்டி இருப்பதால், கடையைப் பார்த்துக்கொள்ள தனியாக யாரையும் விட்டுச்செல்ல இயலாது. வெளி உலகத்துக்குப் புதுமையான இந்த “ங்காஹ் லூ தவ்ர் முறைமை” அண்மையில் பரபரப்பாக செய்திகளில் வெளியானது.

’மை ஹோம் இந்தியா’ என்ற தன்னார்வக் குழுவினைத் தொடர்ந்து மிசோரம் முதலமைச்சர் சோரம் தங்காவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பின்னரே இது குறித்து அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானது. கரோனா பெருந்தொற்று மின்னல் வேகத்தில் பரவி வரும் இச்சூழலில், இத்தகைய கடைகள் தனி மனித – சமூக இடைவெளியினை இயல்பாகக் கொண்டிருப்பதை சோரம்தங்கா குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் ஆளில்லா கடைகள்

வணிகர் இல்லாத இது போன்ற கடைகள் பல்வேறு இடங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பதைக் காண முடிகிறது. நாகாலாந்து மாநிலத்தின் லெஷெமி கிராமத்தில் அங்குள்ள விவசாயிகள் மற்றும் சாகுபடி செய்வோர் மத்தியிலும் இத்தகைய கடைகள் நடைமுறையில் உள்ளன. பெங்களூரில் இயங்கும் ‘ட்ரஸ்ட் ஷாப்’ குழும கடைகளில் வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் தென்னிந்திய உணவு வகைகளுக்கான இட்லி/தோசை மாவு, சப்பாத்திக்கான கோதுமை மாவு, மலபார் பரோட்டா ஆகியவற்றை வாங்கிச் செல்லலாம். இந்தக் கடைகளில் பெரும்பாலும் 90% விற்பனையும், ஒரு சில நாள்களில் 100% அளவு விற்பனையும் நடைபெறுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் பாபநாசம் நகரில் உள்ள ரோட்டரி கிளப் இது போன்ற ஆளில்லா கடையினை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

காந்தி ஜெயந்தி அன்று, நகரப் பேருந்து நிலையத்தினை ஒரு கடையாக மாற்றி, வீட்டு உபயோகப் பொருள்கள், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான எழுது பொருட்கள், தின்பண்டங்கள் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. அங்கு விற்பனைக்கு உள்ள பொருள்களின் அருகே விலைப் பட்டியலும் பணப் பெட்டியும் வைக்கப்படுகின்றன. பொருள்களை வாங்குவோர், உரிய தொகையை பணப்பெட்டியில் போட்டு விடலாம். மீதி வரவேண்டி இருப்பின், சில்லறையை எடுத்துக் கொள்ளலாம்.

கேரள மாநிலத்தில் மாற்றுத் திறனாளிகளின் முன்னேற்றத்திற்காக செயல்படும் ’ஜனசக்தி’ என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் அரபிக் கடலின் கரையோர கிராமமான அழிக்கோடு அருகேயுள்ள வான்குலத்துவாயலில் இது போன்ற சுய சேவைக் கடையை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. அசம்பாவிதங்களைத் தடுக்க, கடையில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களைப் பொறுத்தியுள்ளது அந்த அமைப்பு.

சண்டிகர் நகரில், தானாஸ் பகுதியில் உள்ள சீர்மிகு மேல்நிலைப் பள்ளியிலும் இது போன்ற ஆளில்லா கடை செயல்படுகிறது. பள்ளி மாணவருக்காக பேனா, பென்சில், நோட்டுப் புத்தகங்களின் விற்பனைக்காக தொடங்கப்பட்ட அதில் கடைக்கோ சிசிடிவி கேமராக்களோ இல்லை. “சுய சேவை மேற்கொள்க – நேர்மையாக பணம் செலுத்துக” என்ற அறிவிப்புப் பலகை மட்டுமே உண்டு.

அயல் நாடுகளில் ஆளில்லா கடைகள் : ஜப்பான், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து

ஜப்பானின் கடலோர கிராமங்கள் பலவற்றில் இத்தகைய ஆளில்லா கடைகள் இன்றும் செயல்படுகின்றன. தலைநகர் டோக்கியோவின் தெற்கே கணகவா மண்டலத்தில் அங்குள்ள யமடா குடும்பத்தினர் நடத்தும் ஆளில்லா கடையில் வாடிக்கையாளருக்கு வசதியாக கால்குலேட்டர் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும்.

வாடிக்கையாளர்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட பொருள்களின் விலையைக் கணக்கிட்டு, தொகையை அங்குள்ள பணம் பெறுவதற்கான சிறிய மரப்பெட்டியில் போட்டுவிடலாம். இது போன்ற கடையை சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜிம்மெல்வால்டு கிராமத்தில் பார்த்த பின்னரே, டேவிட் வாட்டர்ஹௌஸ் இந்த கருத்தாக்கத்தை லண்டன் நகருக்கு எடுத்துச் சென்றார். ‘ட்ரஸ்டி’ என்றழைக்கப்பட்ட ‘த ஹானஸ்டி ஷாப்’ (நேர்மை அங்காடி), உண்மையில் லண்டன் டவர் அருகில் அமைந்த ஒரு டபுள் டக்கர் பஸ் ஆகும்.

அங்கு விற்பனை செய்யப்பட்ட பெரும்பாலான பொருள்களின் விலை 20 பவுண்டுக்கும் குறைவு. மேலும் காலை, மாலை என இரு வேளைகளிலும், கடையில் புதிதாக பொருள்களை விற்பனைக்கு வைப்பது வழக்கம். இந்த ஆளில்லா கடை எந்த ஒரு இழப்பையோ, நஷ்டத்தையோ சந்திக்கவில்லை.

ஆளில்லா கடைகள்: சிறந்த வணிக வடிவமா?

எந்த ஒரு வியாபாரத்திலும் நம்பிக்கையும் நாணயமும் நுகர்வோர் நடத்தையைத் தீர்மானிப்பதில், குறிப்பாக ஆன்லைன் வர்த்தகத்தில், முக்கியப் பங்காற்றுகின்றன. இதற்கு நேர்மாறாக, வாடிக்கையாளரின் நாணயத்தில் நம்பிக்கை வைத்து செயல்படும் ஆளில்லா கடைகள் நேர்மையைக் கைவிடுவதில்லை என்பதற்கு வாழும் உதாரணங்களாய் இருக்கின்றன.

இது மிக அற்புதமான முன் மாதிரி வணிக வடிவம்தான். மேலும் பெருந்தொற்று காலத்திற்கேற்ற ஒன்று என்றும் ஏற்றுக்கொள்ளலாம். இருப்பினும், ஒட்டு மொத்த லாபத்தைவிட நஷ்டம் குறைவாக இருக்கும் என்றால் மட்டுமே இந்த ஆளில்லா கடை என்னும் கருத்தாக்கம் பொருளாதார ரீதியாக வெற்றி பெறும். மேலும் கடையின் உரிமையாளருக்கு, மிசோ விவசாயி போல அல்லது எனது பகுதியில் உள்ள செய்தித்தாள் விற்பனையாளரைப் போல, கூடுதல் வருமானத்திற்கு வேறு வேலை இருக்க வேண்டும். அவ்வாறு கடையைத் தொடங்கினால், வான்குலத்துவாயல் சுய சேவை கடையில் உள்ளதுபோல் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி பரிசோதனை முயற்சியில் ஈடுபடலாம்.

ஆனால், எல்லா கடைகளையும் அவ்வாறு ஆளில்லாமல் இயக்குவது சாத்தியமில்லை. எடுத்துக்காட்டாக, மருந்தகங்களில் ஒரு குறிப்பிட்ட மாத்திரையையோ, டானிக்கையோ பிற பொருள்களையோ கண்டறிய பயிற்சி தேவை. சில வகைப் பொருள்களை விற்பனை செய்ய விற்பனையாளர்களின் சேவை அவசியம்.

ஆனால், காய்கறி, கனிகளை விற்பனை செய்யும் ஆளில்லா கடைகளால்கூட விற்பனையாளர்கள் பெருமளவில் வேலை இழக்க வேண்டி வரும். அவர்களுக்கு மாற்று வேலை கிடைப்பதும் எளிதான காரியமல்ல. நம்பிக்கை கவர்ச்சிகரமாக இருந்தாலும், மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்திற்கு அவ்வளவு விரும்பத்தக்கதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இயல்பான நம்பிக்கையோ அல்லது சிசிடிவி கேமரா இருப்பதால் உருவாகும் போலி நம்பிக்கையோ, இரண்டுமே சமூக பொருளாதார தளத்தில் மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்.

இதையும் படிங்க: 'மறமானம் மாண்ட...' - திருக்குறளை மேற்கோள்காட்டிய மோடி

Last Updated : Jul 3, 2020, 5:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.