ETV Bharat / bharat

கள்ள ஆட்டம் ஆடிய சிவசேனா பிரமுகர் கைது!

லூதியானா: உயர் பாதுகாப்பு கிடைக்கும் என்ற நப்பாசையில் போலியான தாக்குதல் நாடகம் நடத்திய சிவசேனா பிரமுகரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

author img

By

Published : Mar 13, 2020, 10:15 AM IST

Updated : Mar 13, 2020, 11:25 AM IST

Shiv Sena Ludhiana Shiv Sena leader Narinder Bhardwaj கள்ளாட்டம் ஆடிய சிவசேனா பிரமுகர் கைது உயர் பாதுகாப்பு, போலி புகார், போலி தாக்குதல் நாடகம், புகார், கைது Shiv Sena leader Narinder Bhardwaj arrested for 'faking' an attack on himself லூதியானா சிவசேனா தலைவர் கைது
Shiv Sena leader Narinder Bhardwaj arrested for 'faking' an attack on himself

சிவ சேனாவின் (இந்துஸ்தான்) தொழிலாளர் பிரிவு தலைவர் நரிந்தர் பரத்வாஜ், கடந்த 7ஆம் தேதி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அந்தப் புகாரில், “எனது காரை இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் வழிமறித்து அடித்து நொறுக்கினர்.

அதன்பின்னர் என்னையும் இரும்புக் கம்பியால் தாக்கினார்கள். அவர்களிடமிருந்து நான் நூலிழையில் உயிர் பிழைத்தேன்” என்று கூறியிருந்தார்.

இது குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தாக்குதல் எதுவும் நடக்கவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து காவலர்கள் பரத்வாஜூடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது உயர் பாதுகாப்பு பெற வேண்டும் என்ற ஆசையில் அவர் தாக்குதல் நாடகம் நடத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நரிந்தர் பரத்வாஜை காவலர்கள் கைதுசெய்தனர்.

இதையும் படிங்க: எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு மிரட்டல்: ஆளுநரிடம் சந்திரபாபு நாயுடு முறையீடு

Last Updated : Mar 13, 2020, 11:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.