மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைத்ததற்கு எதிரான வழக்கு விசாராணை இரண்டாம் நாளாக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் - தேசிய வாத காங்கிரஸ் - சிவசேனா ஆகிய மூன்று கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மகாராஷ்டிர ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம் அளித்துள்ளனர்.
காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாலும், தற்போதைய அரசுக்குப் பெரும்பான்மை இல்லாததாலும் தங்களை ஆட்சியமைக்க அழைக்குமாறு சிவசேனா அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது. கடிதத்தை ஆளுநர் மாளிகையிலுள்ள அலுவலர்களிடம் வழங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது வாதம் - மகாராஷ்டிராவில் யாருக்குச் சாதகமாக அமையப் போகிறது தீர்ப்பு?