வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நான்கு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிறகு, ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும் ஷேக் ஹசீனா நேரில் சந்தித்துப் பேசினார்.
இது குறித்து ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, வங்கதேசம் உடனான உறவுக்கு இந்தியா மிகுந்த முன்னுரிமை அளிக்கிறது எனவும், இருதரப்புத் திட்டங்கள் வளமான பிராந்தியத்தை உண்டாக்கும் எனவும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார்" எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக பிரதமர் மோடியுடனான சந்திப்பில் ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிய நிலையில், மூன்று திட்டங்கள் திறந்துவைக்கப்பட்டன.