ETV Bharat / bharat

காங்கிரஸில் இணையவிருக்கும் பாஜக மூத்த தலைவர்! - congress

டெல்லி: பாஜக கட்சியின் மூத்த தலைவர் சத்ருகன் சின்கா ஏப்ரல் 6 ஆம் தேதி காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சத்ரூகன் சின்கா
author img

By

Published : Mar 28, 2019, 4:54 PM IST

பிகார் மாநிலம் பாட்னா பகுதியைச் சேர்ந்த சின்கா 2014 நாடாளுமன்றத்தேர்தலில் பாட்னா ஷகிப் தொகுதியில் வெற்றி பெற்று மத்திய அமைச்சராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக ஆளும் பாஜக அரசையும், மோடியையும் எதிர்த்து பொது மேடைகளில் சத்ருகன் சின்கா பேசி வந்தார். இதனால் சின்கா நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடலாம் என அரசியல் வட்டாரத்தில் ஒருவித பேச்சு அடிப்பட்டது.

இதை உறுதிபடுத்தும் விதமாக பாஜக கட்சி தற்போது வெளியிட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலில், ரவிசங்கர் பிரசாத் பாட்னா ஷகிப் பகுதியில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளது.

இதனிடையே தன்னுடைய சொந்த தொகுதியில் சீட் கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ள சின்கா, காங்கிரஸ் கட்சி சார்பில் பாட்னா ஷகிப் தொகுதியில் ரவிசங்கர் பிரசாத்தை எதிர்த்து போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது.

மேலும் ராகுல்காந்தியை நேரில் சந்தித்த சத்ருகன் சின்கா, ஏப்ரல் 6 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பரப்புரை கமிட்டியின் தலைவர் அகிலேஷ் ப்ரசாத், சத்ருகன் சின்கா மார்ச் 28 ஆம் தேதி எங்கள் கட்சியில் இணைவார் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.