ETV Bharat / bharat

'டாடாவுக்கு எழுதிய கடிதம்... திடீரென மாறிய வாழ்க்கை' - ரத்தன் டாடாவின் உதவியாளரான இளைஞரின் கதை!

author img

By

Published : Nov 24, 2019, 1:49 AM IST

உலகளவில் மிகவும் பிரபலமான ரத்தன் டாடாவின் உதவியாளரான மும்பை சேர்ந்த 27 வயது இளைஞரின் கதை பற்றி தான் இந்த செய்தி தொகுப்பு...

சாந்தனு நாயுடு

வாழ்க்கையில் பெரிய நிறுவனத்தில் பணிபுரிந்திட மாட்டோமா என்ற கனவு யாருக்குத் தான் இருக்காது. அதைப் போல், சாந்தனு நாயுடு என்ற இளைஞர், இந்தியாவில் மிகவும் பிரபலமான டாடா நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடாவிடம் உதவியாளராகச் சேர்ந்த கதையை ஃபேஸ்புக் பக்கமான ‘ஹூமன்ஸ் ஆஃப் பாம்பே’ வெளியிட்டது. அதில்,

நண்பர்களுடன் உருவாக்கிய நாஸ் காலர்
ரத்தன் டாடாவின் உதவியாளர் சாந்தனு நாயுடு

"நான் 2014ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்துவிட்டு, டாடா நிறுவனத்தில் பணிபுரியத் தொடங்கினேன். எனது வாழ்க்கை மிகவும் அமைதியாகச் சென்று கொண்டிருந்தது. ஆனால், ஒரு நாள் பணிமுடிந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, வாகனத்தில் அடிப்பட்டு நாய் ஒன்று இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ந்தேன். உடனடியாக உடலைச் சாலையிலிருந்து அப்புறப்படுத்தலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென்று அதன் மீது கார் ஒன்று செல்வதைக் கண்டு குழம்பிப் போனேன். தினமும் எத்தனை நாய்கள் இப்படி சாலையில் அடிப்பட்டு இறந்திருக்கும் என யோசிக்கத் தொடங்கினேன்

நாய்களுக்காகப் பிரத்தியேக காலர்

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இதனையடுத்து, எனது நண்பர்களுடன் சேர்ந்து, நாய்களுக்காகப் பிரத்தியேக காலர் உருவாக்கினேன். காலரில் பிரதிபலிப்பு தன்மை பொருத்தப்பட்டிருப்பதால், வாகன ஒட்டிகளுக்குத் தூரத்திலிருந்தாலும் நாய்கள் வருவதைப் பார்க்க நேரிடும். அடுத்த நாள், சில நாய்களுக்குக் காலர் மாட்டி விட்டோம். பின்னர், காலை எழுந்தவுடன் கிடைத்த செய்தி மகிழ்ச்சியடைய வைத்தது. நாங்கள் உருவாக்கிய காலரால் நாய் ஒன்று காப்பாற்றப்பட்டுள்ளது.

நண்பர்களுடன் உருவாக்கிய நாய் காலர்
நண்பர்களுடன் உருவாக்கிய நாய் காலர்

இதனையடுத்து, நாங்கள் தயாரித்த காலர் மிகவும் பிரபலம் அடைந்தது. மக்களும் காலர் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டினர். ஆனால், எங்களுக்கு போதுமான பணம் இல்லாததால், மக்களுக்குத் தேவையான காலர் உற்பத்தி செய்ய முடியவில்லை. அப்போது, என்னுடைய தந்தை, "உதவி செய்ய வலியுறுத்தி உனது நிறுவன முதலாளிக்கு கடிதம் ஏழுது, அவருக்கும் நாய்கள் என்றால் ரொம்ப பிடிக்கும் எனக் கூறினார். ஆனால், எனக்கு தயக்கமாகவே இருந்தது. இருப்பினும் வேறுவழி இல்லாததால், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, கடிதம் எழுதி அவருக்கு அனுப்பிவிட்டு என்னுடைய தினசரி வாழ்க்கைக்குச் சென்றுவிட்டேன்.

நண்பர்களுடன் உருவாக்கிய நாய் காலர்
நாய் காலர்

எனது வீட்டுக் கதவைத் தட்டிய அவரின் கடிதம்

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, திடீரென்று ரத்தன் டாடாவிடமிருந்து கடிதம் எனக்கு வந்தது. அதில், உங்கள் கண்டுபிடிப்பு மிகவும் அற்புதமாக இருக்கிறது. நான் உங்களைச் சந்திக்க விரும்புகிறேன் எனத் தெரிவித்திருந்தார். சில நாட்கள் கழித்து அவரை மும்பையில் உள்ள நிறுவனத்தில் நேரடியாகச் சந்தித்தேன். அவர் கூறுகையில், ‘நீங்கள் செய்யும் வேலை மிகவும் அருமையானது என்னைக் கவர்ந்துவிட்டது எனத் தெரிவித்தனர். இதைக் கேட்டதும் எனக்கு கூஸ்பம்ப்ஸ் ஆக இருந்தது . பின்னர் அவருடைய நாய்களைப் பார்க்க, என்னை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இப்படி தான் எங்கள் நட்பு தொடங்கியது. மேலும், நாய் காலர் பொருட்கள் உற்பத்தி செய்யவும் நிதியளித்தார். ஆனால், என்னுடைய மாஸ்டர் படிப்புக்காக வெளிநாடு செல்ல வேண்டியிருந்தது. அதனால் அவரிடம், எனது படிப்பு முடிந்தவுடன் எனது வாழ்க்கையை டாடா அறக்கட்டளையில் முழுவதுமாக பணிபுரிய அர்ப்பணிப்பேன் என உறுதியளித்தேன். அவரும், சம்மதம் தெரிவித்தார்.

நண்பர்களுடன் உருவாக்கிய நாஸ் காலர்
ரத்தன் டாடா

நேரடியாக வந்த தொலைப்பேசி அழைப்பு

பின்னர் படிப்பு முடிந்து இந்தியா வந்து சில நாட்களில், அவராகவே என்னை தொலைப்பேசியில் அழைத்தார். அவர், எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது. அதனால், என்னுடைய உதவியாளராக பணிபுரிய விருப்பம் இருக்கா எனக் கேட்டார். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. நான் ஒரு ஆழ்ந்த மூச்சு எடுத்தேன், பின்னர் சில நொடிகள் கழித்து ‘ஆம்’ என்றேன். இப்போது எனது வாழ்க்கை மாறிவிட்டது. அவரிடம் உதவியாளராகச் சேர்ந்து 18 மாதங்கள் முடிந்து விட்டது. என் மீது அதீத நம்பிக்கையும் வைத்துள்ளார். எனது வயதினருக்குச் சரியான நண்பர்கள், சரியான வழிகாட்டி , சரியான முதலாளியைக் கண்டுபிடிப்பதில் மிகவும் சிரமப்படுவார்கள். ஆனால், எனக்கு இந்த அனைத்துமே "ரத்தன் டாடா" என்கிற சூப்பர் மனிதரிடம் கண்டுவிட்டேன். மக்கள் அவரை பாஸ் என்று அன்புடன் அழைக்கிறார்கள், ஆனால் நான் அவரை ‘மில்லினியல் டம்பில்டோர்’ ‘Millennial Dumbledore’ என்று அழைக்க விரும்புகிறேன். அந்த பெயர் அவருக்கு மிகவும் பொருத்தமானது என்று நான் நினைக்கிறேன்" எனத் தெரிவத்தார்.

இந்த இளைஞனின் கதை, பல்வேறு துடிப்புடன் இருக்கும் இளைஞர்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தற்போது, இந்த ஃபேஸ்புக் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: "கஞ்சா சுவைக்கும் வேலைக்கு சம்பளம் ரூ. 2 லட்சம் " - குவிந்த விண்ணப்பங்கள்!

Intro:Body:

https://www.vikatan.com/news/india/shantanu-naidu-got-the-job-with-ratan-tata

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.