குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக தில்லி ஷாகீன் பாக் பகுதியில் போராட்டம் 50-க்கும் மேற்பட்ட நாள்களாக நடைபெற்றுவருகிறது. இந்தப் போராட்டத்தால் சாலைகள் தடைபட்டுள்ளதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன. இதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே. கௌல், கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 17ஆம் தேதி விசாரித்தது.
அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், "மக்கள் சாலைகளுக்கு வந்து போராடத் தொடங்கினால், என்னவாகும் என்பதுதான் இதன் பிரச்னை. கருத்துகளை வெளிப்படுத்துவதில்தான் ஜனநாயகம் செயல்படுகிறது. ஆனால் அதற்கென்று சில எல்லைகள் உண்டு. சாலைகளை மறிப்பது பிரச்னையாக இருக்கிறது. அதேசமயம், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சட்டத்துக்கு எதிராக போராடுவதற்கான உரிமையும் மக்களுக்கு இல்லை என்று கூறவில்லை" என்றனர்.
இந்த நிலையில் ஷாஹீன் பாக் போராட்டக்காரர்களுக்கு மாற்று இடம் வழங்கலாம் என டெல்லி காவல் துறையினருக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து மத்தியஸ்தர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் சீல்வைக்கப்பட்ட அறிக்கையை மத்தியஸ்தர்கள் தாக்கல்செய்தனர். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாஹீன் பாக்கில் கடந்த இரு மாதத்துக்கு மேலாக போராட்டம் நடந்துவருகிறது.
இதையும் படிங்க: இந்தியாவுடன் 3 பில்லியன் டாலர் ராணுவ ஒப்பந்தம் - ட்ரம்ப் அறிவிப்பு