மகாராஷ்டிரா மாநிலம், ஷாஹாபூர் தொகுதியின் என்சிபி எம்எல்ஏவாக இருப்பவர் டாலட் டரோடா. நேற்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற முதலமைச்சர் பதவியேற்பு விழாவிற்குச் சென்ற டரோடாவைக் காணவில்லை என முன்னாள் எம்எல்ஏ பாண்டுரங் பரோரா ஷாஹாபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகார் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கூட்டணி ஆட்சியமைக்கும் என நாடு முழுவதும் எதிர்பார்த்த நிலையில், திருப்புமுனையாக பாஜக ஆட்சியமைத்தது.
அம்மாநில முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸூம், துணை முதலமைச்சராக அஜித் பவாரும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதற்கான நிகழ்வில் கலந்து கொள்ள ஷாஹாபூர் டாலட் டரோடா சென்றார். ஆனால் அவர் திரும்பவில்லை. டாலட் டரோடா குறித்து உரிய விசாரணை நடத்தி கண்டுபிடித்துத் தர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:மகாராஷ்டிர அரசியலில் திருப்பம்: தேவேந்திர ஃபட்னாவிஸ் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்பு!