ETV Bharat / bharat

இளைஞர்கள் போராடுவதற்கு எதிர்க்கட்சிகளே காரணம் - அமித் ஷா குற்றச்சாட்டு

டெல்லி: இளைஞர், சிறுபான்மையினர் ஆகியோரை தூண்டிவிட்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட வைத்தது எதிர்க்கட்சிகள்தான் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டியுள்ளார்.

Shah
Shah
author img

By

Published : Jan 24, 2020, 2:44 PM IST

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. இதனிடையே, ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டுவருகின்றன. டெல்லி மாட்டியாலாவில் பாஜக சார்பாக பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில், உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்த அமித் ஷா, "பொய் வாக்குறுதிகள் அளிப்பதற்கென்று ஒரு போட்டி வைத்தால் அதில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்தான் வெற்றிபெறுவார்.

நாட்டிலேயே தரமற்ற குடிநீர் டெல்லியில்தான் வழங்கப்படுகிறது. பிரதமர் மோடிக்கு ஏழை மக்கள் வாக்களித்துவிட கூடாது என்பதற்காகத்தான் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் அமல்படுத்தவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில்தான் பாஜக கடைசியாக வென்றது. உலக தரம் வாய்ந்த நகரமாக டெல்லியை மாற்ற மோடிக்கு வாய்ப்பு தாருங்கள்.

அமித் ஷா

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையின சமூக அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தடை கற்களாக உள்ளனர். இளைஞர்கள், சிறுபான்மையினர்கள் ஆகியோரை தூண்டிவிட்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட வைத்தது எதிர்க்கட்சிகள்தான்" என்றார்.

இதையும் படிங்க: 'மதச்சார்பின்மைக்கு அடிக்கப்பட்ட கடைசி ஆணி' - திக்விஜய சிங்

Intro:Body:

https://www.aninews.in/news/national/politics/shah-accuses-congress-opposition-parties-of-provoking-minorities-to-cause-riots-in-delhi20200123212434/

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.