ETV Bharat / bharat

சிபிஎஸ்இ பாடப்பிரிவு சர்ச்சை: புதுச்சேரி எஸ்.எப்.ஐ ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Jul 17, 2020, 9:10 PM IST

புதுச்சேரி: சிபிஎஸ்இ பாடப்பிரிவில் பன்முகத்தன்மை, கூட்டாட்சி உள்ளிட்ட பாடப் பிரிவுகளை நீக்கியுள்ள மத்திய அரசைக் கண்டித்து இந்திய மாணவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

SFI Protest
SFI Protest
சிபிஎஸ்இ பாடப்பிரிவில் ஜனநாயகம் பன்முகத்தன்மை, கூட்டாட்சி, குடியுரிமை, மதச்சார்பின்மை, அரசியல் அறிவியல், தந்தை பெரியார் குறித்து பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளதையும், மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் இப்போராட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிரதேச தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். செயலாளர் விண்ணரசன் பிரதேச குழு உறுப்பினர்கள் தரணி, வந்தனா, செம்மலர், செந்தமிழ், ஸ்டீபன் ராஜ், வசந்த் ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னதாக முகக்கவசம் அணிந்து, தகுந்த இடைவெளி விட்டு மத்திய அரசை எதிர்த்து மாணவர்கள் முழக்கமிட்டனர். மேலும் பல்கலைக்கழகம் மானியக் குழுவின் சுற்றறிக்கை நகலை எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்

இதேபோல் மதகடிப்பட்டு, பாகூர் உள்ளிட்ட புதுச்சேரி முழுவதும் மாணவர்கள் சங்க நிர்வாகிகளின் வீடுகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையும் படிங்க: பெரியார் சிலை மீது காவிச் சாயம் ஊற்றிய வழக்கில் பாரத் சேனா நிர்வாகி சரண்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.